சென்னை: சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். டாஸின் போது தோனியிடம், அடுத்த சீசனில் களமிறங்குவீர்களா என்று டேனி மாரிசன் கேள்வி எழுப்பினார். அதற்கு தோனி, அடுத்த சீசனில் விளையாடுவேனா என்பது தெரியாது. ஆனால் அடுத்த போட்டிக்கு நிச்சயம் வருவேன் என்று தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 49வது லீக் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி களமிறங்கியுள்ளது. இந்த போட்டியில் தோல்வியடைந்தால், சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கான ரேஸில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேற்றப்படும். அதேபோல் சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி தொடர்ச்சியாக 4 வெற்றிகளை பெற்றிருக்கிறது.

இந்த மோசமான சாதனையை சிஎஸ்கே அணி மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் கடந்த 2 ஆண்டுகளாக சேப்பாக்கம் மண்ணில் சிஎஸ்கே அணியை எளிதாக வீழ்த்தி பஞ்சாப் அணி ஆதிக்கம் செலுத்தி இருக்கிறது. இந்த சீசனில் பஞ்சாப் அணி சிறந்த ஃபார்மில் இருப்பதால், தொடர்ந்து ஆதிக்கத்தை தொடருமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் ஸ்ரேயாஸ் ஐயர் பேசுகையில், எங்களின் அணுகுமுறையில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறோம். எங்களின் பயிற்சி மற்றும் தயாரிப்பு பணிகள் சிறப்பாக அமைந்துள்ளது. மிகச்சிறந்த ஆட்டத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.
கிளென் மேக்ஸ்வெலுக்கு மட்டும் விரலில் காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கான மாற்று வீரரை இன்னும் தேர்வு செய்யவில்லை என்று தெரிவித்தார். தொடர்ந்து சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி பேசுகையில், அடுத்த போட்டிக்கே வருவேனானு தெரியாது. அதற்குள் அடுத்த சீசனை பற்றி பேசுகிறீர்கள். சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக இருப்பது எனக்கும் பெருமை.
ஐபிஎல் தொடரில் அதிகளவிலான போட்டிகளை சொந்த மண்ணில் விளையாடுகிறோம். ஆனால் இதுவரை சொந்த மண்ணில் கிடைக்கும் சாதகத்தை சிஎஸ்கே அணியால் பயன்படுத்திக் கொள்ல முடியவில்லை. இந்த போட்டியில் சிஎஸ்கே அணியில் எந்த மாற்றமும் இல்லை. அதனால் அதே அணியுடன் மீண்டும் களமிறங்குகிறோம்.
அதற்கு காரணம் ஒன்றுதான். சிஎஸ்கே அணி எப்போதும் பெரிதாக வீரர்களை மாற்றியது கிடையாது. ஆனால் இந்த சீசன் அப்படியல்ல. அதற்கு காரணம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். பெரும்பாலான வீரர்கள் சிறப்பாக விளையாடினால், 1 அல்லது வீரர்களை மட்டுமே மாற்றம் செய்வோம். இந்த சீசனில் சிஎச்கே அணிக்கு சிறப்பாக இல்லை.
அதேபோல் மெகா ஏலத்திற்கு பின் நடக்கும் முதல் சீசன் இதுதான். அதனால் எந்த பேட்ஸ்மேன் சிஎஸ்கே அணிக்கு சிறப்பாக இருப்பார் என்பதை ஓரளவிற்கு மனதளவில் அறிவோம் என்று தெரிவித்துள்ளார். அடுத்த சீசனில் களமிறங்குவீர்களா என்ற கேள்விக்கு, தோனி தெளிவாக எந்த பதிலையும் அளிக்காததால், இந்த சீசனே கடைசியாக இருக்கும் என்று ரசிகர்களிடையே விவாதம் எழுந்துள்ளது.