For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

Chahal: 5 பந்துகளில் 4 விக்கெட்ஸ்.. ஹாட்ரிக் சாதனை படைத்த சாஹல்.. 2வது முறையாக சாதித்த சுள்ளான்!

சென்னை: சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணியின் நட்சத்திர ஸ்பின்னரான சாஹல் ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார். ஏற்கனவே ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய போது சாஹல் ஹாட்ரிக் சாதனை படைத்திருந்த நிலையில், தற்போது பஞ்சாப் அணிக்காகவும் ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்தி உள்ளார்.

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி 19.2 ஓவர்களில் 190 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. சிஎஸ்கே அணிக்காக சிறப்பாக ஆடிய சாம் கரண் 47 பந்துகளில் 88 ரன்களையும், டிவால்ட் பிரெவிஸ் 26 பந்துகளில் 32 ரன்களையும் விளாசினர்.

CSK vs PBKS Yuzvendra Chahal picks a hat trick wickets for Punjab Kings against CSK at the Chepauk Stadium

பஞ்சாப் அணி தரப்பில் சாஹல் 3 ஓவர்களில் 32 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 18 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 177 ரன்களை எடுத்திருந்தது. களத்தில் தோனி - சிவம் துபே இருந்ததால், சிஎஸ்கே அணி எளிதாக 200 ரன்களுக்கு மேல் விளாசுவார்கள் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர்.

அதற்கேற்ப சாஹல் வீசிய முதல் பந்திலேயே தோனி சிக்ஸ் அடித்து அசத்தினார். ஆனால் 2வது பந்திலும் சிக்ஸ் அடிக்கும் முயற்சியில் தோனி 4 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, 3வது பந்தில் தீபக் ஹூடாஅ 2 ரன்களை சேர்த்தார். இதன்பின் 4வது பந்தில் தீபக் ஹூடா 2 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, இம்பேக்ட் பிளேயராக வந்த அன்சுல் கம்போஜ் முதல் பந்திலேயே போல்டாகினார்.

இதனால் சாஹலுக்கு ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது நூர் அஹ்மத் பேட்டிங் செய்ய களமிறங்கினார். அந்த பந்தில் நூர் அஹ்மத் சிக்ஸ் அடிக்க முயற்சித்து லாங் ஆன் திசையில் யான்சன் கேட்ச் பிடித்து அசத்தினார். இதன் மூலமாக சாஹல் ஹாட்ரிக் சாதனை படைத்ததோடு, 5 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதித்தார்.

இதற்கு முன்பாக 2022ஆம் ஆண்டு கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக ஆடிய சாஹல் ஹாட்ரிக் சாதனையை படைத்தார். இதன் மூலமாக ஐபிஎல் தொடரில் 2 முறை ஹாட்ரிக் சாதனை படைத்த வீரர்கள் பட்டியலில் சாஹல் இணைந்துள்ளார். இதில் அமித் மிஸ்ரா முதலிடத்தில் 3 முறை ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார்.

இதன்பின் யுவராஜ் சிங் 2 முறை ஹாட்ரிக் சாதனை படைத்து யுவராஜ் சிங் 2வது இடத்திலும் இருக்கின்றனர். இந்த பட்டியலில் சாஹலும் 2 முறை ஹாட்ரிக் சாதனை படைத்து இணைந்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை 24 முறை பவுலர்கள் ஹாட்ரிக் சாதனையை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, April 30, 2025, 21:51 [IST]
Other articles published on Apr 30, 2025
English summary
CSK vs PBKS: Yuzvendra Chahal picks a hat trick wickets for Punjab Kings against CSK at the Chepauk Stadium
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+