Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நன்றி மறக்காத டூப்ளசிஸ்.. சிஎஸ்கே வீரர்களை கண்டதும் செய்த விஷயம்.. ரசிகர்கள் நெகிழ்ச்சி - வீடியோ!

மும்பை: ஐபிஎல் தொடரில் இன்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த மிகப்பெரும் மோதல் நடைபெறவுள்ளது.

Recommended Video

Dhoni, Faf, Kohli, Jadeja Hugs Each Other Before CSK vs RCB Match | OneIndia Tamil

22வது லீக் ஆட்டமான இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டியில் வெற்றி பெறுவது இரு அணிகளுக்குமே மான பிரச்சினையாக பார்க்கப்படுகிறது.

இன்றைய போட்டி

இன்றைய போட்டி

நடப்பு சாம்பியனானா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ச்சியாக 4 தோல்விகளை சந்தித்து மன வேதனையில் உள்ளது. புதிய கேப்டன் ரவீந்திர ஜடேஜா இன்றைய போட்டியிலாவது அணியை காப்பாற்ற வேண்டும் என்ற முனைப்புடன் உள்ளார். மற்றொரு புறம் சிஎஸ்கேவின் நண்பர்கள் நிறைந்துள்ள ஆர்சிபி அணி பெரும் பலத்துடன் விளையாடுகிறது.

2 சுவாரஸ்ய விஷயங்கள்

2 சுவாரஸ்ய விஷயங்கள்

சிஎஸ்கேவின் தூணாக இருந்த டூப்ளசிஸ் தான் இன்று அதனை எதிர்க்கவுள்ளார். சிஎஸ்கேவின் பவுலிங் தூணாக இருந்த ஜோஸ் ஹாசல்வுட் இன்று ஆர்சிபிக்காக களமிறங்குகிறார். இதனால் இதே போல தோனியை குரு போன்று நினைக்கும் விராட் கோலி இன்று எதிர்க்கவுள்ளதால், இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ஏகபோகத்திற்கு உள்ளது.

டூபளசிஸின் செயல்

டூபளசிஸின் செயல்

இந்நிலையில் இரு அணிகளும் பாச மழையில் நனைந்த காட்சிகளை சிஎஸ்கே பகிர்ந்துள்ளது. அதில மைதானத்தில் பயிற்சிகாக சென்ற டூப்ளசிஸ், சிஎஸ்கேவின் ஜடேஜா, உத்தப்பா, பிராவோ, தோனி உள்ளிட்டோரை ஓடிச்சென்று கட்டித்தழுவினார். மிகுந்த உற்சாகத்துடன் அவர்களிடம் பேசி மகிழ்ந்தார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

நெகிழ்ச்சியூட்டும் புகைப்படம்

இதே போல தோனியை ஒருபுறம் விராட் கோலி, மற்றொரு புறம் ஃபாப் டூப்ளசிஸ் ஆகியோர் கட்டியணைத்திருந்த புகைப்படமும் வெளியாகி ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது. இப்படி மிகவும் நெருங்கிய நண்பர்கள் எப்படி ஒருவருக்கொருவர் எதிராக செயல்படப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Story first published: Tuesday, April 12, 2022, 12:48 [IST]
Other articles published on Apr 12, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+