Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK : ஹாலிவுட் ஹீரோ மாதிரி இருக்காப்ல.. ஹேர்ஸ்டைலை மாற்றிய தோனி.. வியக்கும் சிஎஸ்கே ரசிகர்கள்!

சென்னை : ஐபிஎல் தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்எஸ் தோனி புதிய ஹேர்ஸ்டைலுக்கு மாறி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது.

17வது சீசனுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை அணியை எதிர்த்து ஆர்சிபி அணி களமிறங்கவுள்ளது. இதற்காக இரு அணிகளை சேர்ந்த வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் நாளை அனைத்து கேப்டன்களும் தொடக்க விழாவில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

CSK vs RCB CSK Captain MS Dhoni gets into a new hairstyle ahead of the RCB Match in the IPL 2024

ஏற்கனவே சிஎஸ்கே அணி நிர்வாகிகளுடன் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் இரவு உணவை ஒன்றாக அமர்ந்து சாப்பிட்ட புகைப்படங்கள் ட்ரெண்டாகின. சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ள ஐபிஎல் தொடக்க விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் பாடகர் சோனு நிகம் ஆகியோர் இணைந்து இசை கச்சேரியில் ஈடுபடவுள்ளனர்.

அதேபோல் பாலிவுட் நடிகர்களான அக்‌ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராஃப் இருவரும் நடனமாட உள்ளனர். இதனை தொடர்ந்து ஐபிஎல் கேப்டன்கள் அனைவரும் இணைந்து ஐபிஎல் கோப்பையுடன் போஸ் கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே ஐபிஎல் தொடருக்காக அனைத்து வீரர்களும் சிறப்பாக தயாராகி வருகின்றனர். பேட்டிங், பவுலிங் மட்டுமல்லாமல் புதிய லுக்கிலும் தயாராகி வருகின்றனர்.

CSK vs RCB CSK Captain MS Dhoni gets into a new hairstyle ahead of the RCB Match in the IPL 2024

ஏற்கனவே விராட் கோலி புதிய ஹேர்ஸ்டைலுக்கு மாறிய புகைப்படங்கள் வெளியாகி ட்ரெண்டாகின. இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி தனது ஹேர்ஸ்டைலில் சிறிய மாற்றங்கள் செய்து சிறியளவில் ட்ரின் செய்த தாடி வைத்து புதிய லுக்கிற்கு மாறியுள்ளார். தோனியின் ஆஸ்தான ஹேர்ஸ்டைலிஸ்டான ஆலிம் ஹக்கிம், புதிய லுக்கிற்கு மாற்றியுள்ளார்.

CSK vs RCB CSK Captain MS Dhoni gets into a new hairstyle ahead of the RCB Match in the IPL 2024

ஒவ்வொரு ஐபிஎல் தொடர் தொடங்கும் போது தோனி புதிய ஹேர்ஸ்டைலுடன் களமிறங்குவது வழக்கம். அவரது ஹேர்ஸ்டைலை இளைஞர்கள் பலரும் அடுத்தடுத்து பின்பற்றுவதால், இந்தியாவில் தோனி ஸ்டைல் ஐகானாகவும் வலம் வருகிறார். தற்போது விண்டேஜ் ஹேர்ஸ்டைலிலேயே வேறு மாதிரியான லுக்கிற்கு வந்துள்ளார் தோனி. இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது.

Story first published: Thursday, March 21, 2024, 13:33 [IST]
Other articles published on Mar 21, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+