For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பிரெவிஸ் விக்கெட்.. டிஆர்எஸ் எடுக்கவிடாமல் நடுவர் செய்த செயல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் அதுதான்!

பெங்களூர்: ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் தோல்விக்கு டிவால்ட் பிரெவிஸ் விக்கெட்டே காரணமாக அமைந்துள்ளது. அவர் டிஆர்எஸ் முறையிட்ட போதும், நேரம் கடந்துவிட்டது என்று நடுவர்கள் வெளியேறக் கூடியது ரசிகர்களிடையே விவாதமாகி உள்ளது.

ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 213 ரன்களை குவித்தது. இதன்பின் களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது.

CSK vs RCB Dewald Brevis wicket controversy is the reason behind CSK loss against RCB at Bangalore

கடைசி ஓவரில் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு 15 ரன்கள் தேவையாக இருந்த போது, 12 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. இதன் மூலமாக ஐபிஎல் வரலாற்றில் ஒரே சீசனில் சிஎஸ்கே அணிக்கு எதிரான 2 போட்டியிலும் ஆர்சிபி அணி முதல்முறையாக வென்று புதிய வரலாறு படைத்துள்ளது. இதனால் சிஎஸ்கே அணி ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.

இந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் தோல்விக்கு இளம் வீரர் டிவால்ட் பிரெவிஸ் விக்கெட்டே காரணமாக அமைந்துள்ளது. லுங்கி இங்கிடி வீசிய 17வது ஓவரில் ஆயுஷ் மாத்ரே 94 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்பின் களமிறங்கிய டிவால்ட் பிரெவிஸ்-க்கு ஃபுல் டாஸ் பந்து ஒன்றை பிரெவிஸ் வீசினார். அதனை பிரெவிஸ் மிஸ் செய்ய, ஆர்சிபி வீரர்கள் அவுட் என்று அப்பீல் செய்தனர்.

இதனால் நடுவர் உடனடியாக அவுட் என்று தீர்ப்பு கொடுக்க, ஜடேஜா - பிரெவிஸ் கூட்டணி டிஆர்எஸ் முறையீடு குறித்து ஆலோசித்தது. இதன்பின் டிவால்ட் பிரெவிஸ் டிஆர்எஸ் அப்பீல் கோரினார். ஆனால் நடுவர்கள் அப்பீல் செய்வதற்கான நேரம் முடிந்துவிட்டதாக கூறி, பிரெவிஸை வெளியேற அறிவுறுத்தினார். அப்போது டிஆர்எஸ் அப்பீல் செய்வதற்கான நேரம் கூட திரையில் காட்டப்படவில்லை.

அதேபோல் அந்த மிஸ் லெக் ஸ்டம்பை மிஸ் செய்தது ரசிகர்களுக்கே புரிந்தது. இதன்பின் ரீப்ளேவில் பார்த்த போது, பந்து ஸ்டம்ப் லைனில் இருந்து வெளியே சென்றது தெரிய வந்தது. இதனால் டிவால்ட் பிரெவிஸ்-க்கு வழங்கப்பட்ட தவறான தீர்ப்பு மற்றும் டிஆர்எஸ் சர்ச்சையே சிஎஸ்கே அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.

Story first published: Saturday, May 3, 2025, 23:48 [IST]
Other articles published on May 3, 2025
English summary
CSK vs RCB: Dewald Brevis wicket controversy is the reason behind CSK loss against RCB at Bangalore
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+