For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிம்பாவை அறிமுகம் செய்த முஃபாசா.. கேப்டன்சியில் இருந்து விலகிய தோனி.. சிஎஸ்கே ரசிகர்களின் சோக மீம்ஸ்

சென்னை : சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகிய நிலையில், சோசியல் மீடியாவில் ரசிகர்கள் உருவாக்கி வரும் மீம்ஸை பார்க்கலாம்.

2008ஆம் ஆண்டில் இருந்து சிஎஸ்கே அணியின் கேப்டனாக செயல்பட்டு வருபவர் தோனி. சிஎஸ்கே அணியின் முகமாகவே தோனி மாறிவிட்ட நிலையில், அவரது இடத்தை நிரப்ப போவது யார் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் நாளை 17வது ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில், சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனை லயன் கிங் படத்தில் சிம்பாவை அறிமுகம் செய்து வரும் முஃபாசாவை போல், சிஎஸ்கே அணி நிர்வாகம் ருதுராஜ் கெய்க்வாடை அறிமுகம் செய்துள்ளதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் அதிரி புரிதி அசத்தல் ரகம்.

CSK vs RCB Fantastic Memes from Social Media after MS Dhoni handed over the CSK Captaincy to Ruturaj Gaikwad ahead of IPL 2024

அசுரன் படத்தில் சிதம்பரம் சொல்லும் வசனத்தை நடிகர் தனுஷ், அவனுக்கு சிவப்பி போச்சேனு கவலை.. எனக்கு சிவப்பியோட போச்சேனு நினைக்கிறேன்.. என்று கூறுவார். அதனை மாற்றி சிஎஸ்கே ரசிகர்கள், "ருதுராஜிற்கு கேப்டன்சி கிடைச்சிருச்சேனு சந்தோஷ படுறதா.. இல்லை தல கேப்டன்சி பண்ணலையேனு வருத்தப்படுறதானு தெரியலை" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் சிஎஸ்கே ரசிகர்களின் மனசாட்சியின் குரல்.

CSK vs RCB Fantastic Memes from Social Media after MS Dhoni handed over the CSK Captaincy to Ruturaj Gaikwad ahead of IPL 2024

ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற கேப்டன்கள் ரோகித் சர்மா மற்றும் தோனி தான். ஏற்கனவே ரோகித் சர்மா கேப்டன்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், எம்எஸ் தோனி கேப்டன்சி பதவியில் இருந்து விலகி இருக்கிறார். இதனை நட்புக்காக படத்தில் சரத் குமார் உயிரிழந்ததை ஏற்க முடியாமல் விஜய குமாரும் இறந்துவிடுவார். நண்பர்கள் இருவரும் ஒன்றாக மறைவதை ஏற்க முடியாமல் குடும்பத்தினர் கதறுவார்கள். அதனை சரத் குமாராக ரோகித் சர்மாவையும், விஜயகுமாராக தோனியையும் மாற்றி உருவாக்கப்பட்டுள்ள மீம் இரு தரப்பு ரசிகர்களின் கதறல்.

CSK vs RCB Fantastic Memes from Social Media after MS Dhoni handed over the CSK Captaincy to Ruturaj Gaikwad ahead of IPL 2024

நண்பன் படத்தின் கிளைமாக்ஸ்-க்கு முந்தைய காட்சியில் நண்பர்கள் அனைவரும் பட்டம் வாங்கிய மகிழ்ச்சியை கொண்டாடிய போது நடிகர் விஜய் மட்டும் காரில் ஏறி புறப்படுவார். அப்போது ஸ்ரீகாந்த், அதுதான் பாரியை பார்க்கிற கடைசி நாளாக இருக்கும் என்று எங்களுக்கு தெரியாது என்று கூறுவார். அதுபோல் 2023ஆம் ஆண்டு ஐபிஎல் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை வீழ்த்திவிட்டு ஜடேஜாவை தூக்கிய கொண்டாடுவார் தோனி. அதுதான் தோனி கேப்டனாக செயல்பட்ட கடைசி போட்டியாக மாறியுள்ளது. இதனை அப்படியே மாற்றி, "அன்னைக்கு தெரியலை.. எங்களுக்கு அதுதான் தோனியை கேப்டனாக பார்க்கிற கடைசி மேட்ச்னு" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் செண்டிமெண்டல் டச்.

CSK vs RCB Fantastic Memes from Social Media after MS Dhoni handed over the CSK Captaincy to Ruturaj Gaikwad ahead of IPL 2024
Story first published: Thursday, March 21, 2024, 18:23 [IST]
Other articles published on Mar 21, 2024
English summary
CSK vs RCB : Fantastic Memes from Social Media after MS Dhoni handed over the CSK Captaincy to Ruturaj Gaikwad ahead of IPL 2024
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+