Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கேப்டன் கோலி, கம்பீர் கிட்ட “பேச்சு” வாங்க இது தான் காரணமா? சுட்டிக் காட்டும் ஆஸி. முன்னாள் வீரர்

சென்னை : ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோத உள்ளன.

கடந்த இரண்டு சீசன்களில் சொதப்பி வரும் பெங்களூர் அணி இந்த சீசனின் முதல் போட்டியில் வெற்றி பெறுமா? என்ற விவாதம் முன்னாள் வீரர்கள் இடையே நடைபெற்று வருகிறது.

அணி சரியில்லை

அணி சரியில்லை

ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் பெங்களூர் அணி ஏன் ஐபிஎல் தொடரில் தோல்வி அடைந்து வருகிறது என்பது குறித்து பேசினார். அவர் பெங்களூர் அணி ஐபிஎல் தொடரை வெல்லும் அளவுக்கு அதன் அணியை வைத்திருக்கவில்லை என கூறி இருக்கிறார்.

அணித் தேர்வு தவறு

அணித் தேர்வு தவறு

அவர்களது அணித் தேர்வு தவறாக இருப்பதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார். ஒரு சாம்பியன் அணிக்கு பேட்டிங் வரிசை மட்டுமே இருந்தால் போதாது, நல்ல பௌலிங் வரிசையும் இருக்க வேண்டும். அங்கே தான் பெங்களூர் அணி சறுக்குகிறது என்கிறார் ஜோன்ஸ்.

பந்துவீச்சு “வீக்”

பந்துவீச்சு “வீக்”

பெங்களூர் அணியில் அதிக பேட்ஸ்மேன்கள் ஆடுகிறார்கள். பேட்டிங்கிற்குத் தான் அந்த அணியில் முக்கியத்துவம் இருக்கிறது. பேட்டிங் அளவிற்கு பந்துவீச்சையும் அவர்கள் வலுவாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிறார் டீன் ஜோன்ஸ்.

கம்பீர் விமர்சனம்

கம்பீர் விமர்சனம்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் எட்டாம் இடம் மற்றும் ஆறாம் இடமே பிடித்தது. கௌதம் கம்பீர் சமீபத்தில் கோலியின் கேப்டன்சியை கடுமையாக விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிளே-ஆஃப் செல்லுமா?

பிளே-ஆஃப் செல்லுமா?

கிட்டதட்ட, ஐபிஎல் கோப்பை வெல்லாத கோலி கேப்டனாகவே லாயக்கில்லை என்பதை சொல்லாமல் சொல்லி இருந்தார் கம்பீர். இந்த அவப்பெயரை மாற்ற வேண்டும் என்றால் 2019 ஐபிஎல் தொடரில் குறைந்தபட்சம் கோலி தன் அணியை பிளே-ஆஃப் வரை அழைத்துச் செல்ல வேண்டும். செய்வாரா?

Story first published: Saturday, March 23, 2019, 16:36 [IST]
Other articles published on Mar 23, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+