CSK vs RCB: சிஎஸ்கே அணிக்குள் வரும் பிரவீஸ்.. பிளேயிங் லெவனில் 2 அதிரடி மாற்றம்
பெங்களூரு: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய மூன்றாவது லீக் ஆட்டத்தில் இன்று விளையாட உள்ளது. அதுவும் சிஎஸ்கே அணியின் பரம எதிரிகளின் ஒன்றான ஆர் சி பி அணியை அதன் சொந்த மண்ணில் இன்று சிஎஸ்கே எதிர்கொள்கிறது.
நடப்பு சாம்பியன் ஆக களம் இறங்கும் ஆர் சி பி அணி, முதல் போட்டியில் அபார வெற்றி பெற்று இருக்கிறது. எனினும் சிஎஸ்கே அணி விளையாடிய இரண்டு ஆட்டங்களிலும், தோல்வியை தழுவி இருக்கிறது. மேலும் சிஎஸ்கே, ஆர்சிபி அணி ரசிகர்களுக்கு எப்போதுமே ஏழாம் பொருத்தமாக இருக்கும்.

கடந்த சில போட்டிகளாக rcb உடன் சிஎஸ்கே அணி தோல்வியை தழுவுவதால் அந்த அணி ரசிகர்கள் சிஎஸ்கே ரசிகர்களை கிண்டல் கேலி செய்து வருகின்றனர். கடந்த 2024 ஆம் ஆண்டு சீசனில் பெங்களூருவில் சிஎஸ்கே அணி தோல்வியை தழுவியது. அப்போது சிஎஸ்கே ரசிகர்கள் மீது எல்லை மீறி ஆர் சி பி ரசிகர்கள் நடந்து கொண்டனர்.
இந்த சூழலில் மீண்டும் ரன் குவிப்புக்கு சாதகமான பெங்களூரில் விளையாடுகிறது. சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு மிகவும் மோசமாக இருப்பதால் இந்த போட்டியில் சில மாற்றங்களை செய்ய அணி நிர்வாகம் முடிவெடுத்திருக்கிறது. இந்த சூழலில் சிஎஸ்கே அணிக்குள் தென்னாபிரிக்க அதிரடி வீரர் பிரவீஸ் விளையாட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒருவேளை பிரவீஸ் அணிக்குள் வந்தால் கார்த்திக் சர்மாவை அணியை விட்டு நீக்க வேண்டும் என்று கிரிக்கெட் வல்லுநர் பிரசன்னா தெரிவித்துள்ளார். சர்பராஸ்கான் தன்னுடைய திறமையை நிரூபித்து இருப்பதால் அவருக்கு பிளேயிங் லெவனில் இடம் தரப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பிரவீஸ் அணிக்குள் வந்தால் சிஎஸ்கே அணியின் பேட்டிங் பல மடங்கு அதிகரிக்கும். ஆனால் சிஎஸ்கே அணியில் மெயின் பிரச்சனையே பந்துவீச்சு தான். இதனால் சிஎஸ்கே அணி பந்துவீச்சில் சில மாற்றங்களை செய்யலாம் என தெரிகிறது. வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் ஆன அக்கேல் உசேன் என்ற சுழற் பந்துவீச்சாளரை சிஎஸ்கே அணி இன்றைய ஆட்டத்தில் பயன்படுத்தலாம்.இதேபோன்று இந்திய பவுலர் குர்ஜப்னீத் சிங் அல்லது ஸ்ரேயாஸ் கோபால் போன்ற வீரர்களை சிஎஸ்கே பயன்படுத்தலாம். இதே போன்று மாட் ஹென்றிக்கு பதில் நியூசிலாந்து வீரரான ஜாக் ஃபோக்ஸ் அணிக்குள் வர வாய்ப்பு இருக்கிறது.


Click it and Unblock the Notifications