Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK vs RCB: போதும் டா சாமி.. சிஎஸ்கே-வை அடித்து துவைத்த ஆர்சிபி.. பெங்களூர் மண்ணில் படுதோல்வி

பெங்களூர்: 2026 ஐபிஎல் தொடரில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 43 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது. 251 ரன்கள் என்ற இமாலய இலக்கை விரட்டிய சிஎஸ்கே, 207 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்த சீசனில் தனது 3-வது தொடர் தோல்வியைப் பதிவு செய்தது. பெங்களூர் மண்ணில் சிஎஸ்கே அணியை துவைத்து காயப்போட்டு அனுப்பி இருக்கிறது ஆர்சிபி அணி.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணிக்கு பிலிப் சால்ட் (46) மற்றும் விராட் கோலி (28) ஆகியோர் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். மிடில் ஆர்டரில் தேவதத் படிக்கல் 29 பந்துகளில் 50 ரன்கள் விளாசி வலு சேர்த்தார்.

CSK vs RCB match result and highlights RCB easily beat CSK after scoring 250 runs batting first

ஆனால், ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் கேப்டன் ரஜத் படிதார் மற்றும் டிம் டேவிட் ஜோடி சிஎஸ்கே பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. ரஜத் படிதார் 19 பந்துகளில் 6 சிக்ஸர்களுடன் 48 ரன்கள் எடுக்க, டிம் டேவிட் வெறும் 25 பந்துகளில் 8 சிக்ஸர்கள் and 3 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் குவித்து மிரட்டினார். இதனால் ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 250 ரன்கள் குவித்தது.

251 ரன்கள் என்ற பிரம்மாண்ட இலக்கை நோக்கி களம் இறங்கிய சிஎஸ்கே அணிக்கு ஆரம்பமே பேரதிர்ச்சியாக அமைந்தது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 7 ரன்களிலும், சஞ்சு சாம்சன் 9 ரன்களிலும், இளம் வீரர் ஆயுஷ் மத்ரே 1 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றினர். 30 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து சென்னை அணி நிலைகுலைந்தது.

இருப்பினும், சர்பராஸ் கான் அதிரடியாக விளையாடி 25 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்தார். அவருக்குத் துணையாக பிரசாந்த் வீர் 43 ரன்களும், ஜேமி ஓவர்டன் 16 பந்துகளில் 37 ரன்களும் எடுத்துப் போராடினர். கடைசி நேரத்தில் அன்ஷுல் கம்போஜ் 19 ரன்கள் எடுத்தார். ஆனால், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறியதால் சிஎஸ்கே அணி 19.4 ஓவர்களில் 207 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

ஆர்சிபி தரப்பில் அனுபவ வீரர் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஜேக்கப் டஃபி, அபிநந்தன் சிங் மற்றும் க்ருணால் பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் ஆர்சிபி அணி புள்ளிப்பட்டியலில் தனது நிலையை வலுப்படுத்தியுள்ளது. அதேசமயம், விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியடைந்த சிஎஸ்கே அணி புள்ளிப்பட்டியலில் 10-வது இடத்திலேயே நீடிக்கிறது. தோனி இல்லாத சிஎஸ்கே அணியின் இந்த ஹாட்ரிக் தோல்வி ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Sunday, April 5, 2026, 23:20 [IST]
Other articles published on Apr 5, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+