Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மின்னல் கூட தோற்று போய்விடும்.. இதுதான்டா தோனி.. சேப்பாக்கத்தில் உறைந்துபோன 38 ஆயிரம் ரசிகர்கள்!

சென்னை: ஆர்சிபி அணியின் அதிரடி வீரரான பில் சால்ட் அதிரடியாக ஆடி 32 ரன்கள் விளாசி இருந்த நிலையில், தோனி மின்னலை விட வேகமாக அடித்த ஸ்டம்பிங் ஒட்டுமொத்த ஆட்டத்தையும் திருப்பியுள்ளது. நூர் அஹ்மத் வீசிய பந்தில் பவுண்டரி விளாச நினைத்த பில் சால்ட், ஒரு சென்டிமீட்டர்கள் வெளியில் கால்களை கொண்டு வந்த போது, தோனி ஸ்டம்பிங் செய்து அசத்தியுள்ளார்.

18வது ஐபிஎல் தொடரின் 8வது லீக் போட்டியில் ஆர்சிபி அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் ஆர்சிபி அணி தரப்பில் பில் சால்ட் - விராட் கோலி கூட்டணி தொடக்கம் கொடுத்தது. சிஎஸ்கே அணி தரப்பில் முதல் ஓவரை கலீல் அஹ்மத் வீசினார்.

IPL 2025 CSK RCB MS Dhoni Virat Kohli

ஆர்சிபி ஆதிக்கம்

அந்த ஓவரில் முதல் சில பந்துகள் பில் சால்ட் தடுமாறினாலும், அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை விளாசி தள்ளினார். இதன்பின் அஸ்வின் வீசிய 2வது ஓவரில் ஒரு சிக்ஸ், 2 பவுண்டரி உட்பட 16 ரன்கள் விளாசப்பட்டது. அடுத்தடுத்து பில் சால்ட் அதிரடியாக ரன்களை குவித்ததால், 4 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 37 ரன்களை விளாசியது.

4வது பவுலர்

இதன்பின் 5வது ஓவரை வீசுவதற்காக நூர் அஹ்மத் அழைக்கப்பட்டார். சிஎஸ்கே அணி விரைவாக விக்கெட் வீழ்த்த வேண்டும் என்பதற்காக முதல் 5 ஓவர்களிலேயே 4வது பவுலரை கொண்டு வந்தது. அந்த ஓவரின் 4வது பந்தில் விராட் கோலி பவுண்டரி அடித்த பின், 5வது பந்தில் ஒரு ரன் எடுத்தார். இந்த நிலையில் கடைசி பந்தை எதிர்கொள்ள பில் சால்ட் வந்தார்.

குழம்பிய ரசிகர்கள்

அப்போது நூர் அஹ்மத் வீசிய கூக்ளி பந்து பில் சால்ட்-ஐ ஏமாற்றி தோனியின் கைகளுக்கு சென்றது. அப்போது பில் சால்ட் கால்கள் சில சென்டிமீட்டர்கள் வெளியில் வந்துவிட்டு, மீண்டும் கால்கள் பின் சென்றது. இதனை கவனித்த தோனி மின்னலை விட வேகமாக ஸ்டம்பிங் செய்து ஆச்சரியம் கொடுத்தார். ஒரு நிமிடம் மைதானத்தில் என்ன நடந்தது என்றே ரசிகர்கள் புரியாமல் குழம்பினர்.

தோனி செய்த மேஜிக்

இதன்பின் 3வது நடுவரிடம் தீர்ப்புக்கு செல்ல, அவர் கேமராவின் கண்கள் வழியாக பார்த்த போது, பில் சால்ட் கால்கள் ஸ்டம்பில் செய்த போது, காற்றில் இருந்தது தெரிய வந்தது. இதனால் பில் சால்ட் 16 பந்துகளில் ஒரு சிக்ஸ், 5 பவுண்டரி உட்பட 32 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் சிஎஸ்கே வீரர்கள் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட முதல் விக்கெட் கிடைத்தது.

சிங்கம் எப்போதும் சிங்கம்தான்

கடந்த போட்டியில் சூர்யகுமார் யாதவை மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்து அசத்திய தோனி, இம்முறை பில் சால்ட்-ஐ அதனை விடவும் விரைவாக ஸ்டம்பிங் செய்து 43 வயதிலும் சிங்கம் எப்போதும் சிங்கம்தான் என்பதை நிரூபித்துள்ளார். இதனால் தோனி ரசிகர்கள் உற்சாகத்தில் கொண்டாடி வருகின்றனர்.

Story first published: Friday, March 28, 2025, 20:18 [IST]
Other articles published on Mar 28, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+