Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே ரசிகரை அடிக்க பாய்ந்த ஆர்சிபி ரசிகர்கள்.. பெங்களூர் தெருவில் அரங்கேறிய கொடூரம்.. வீடியோ!

பெங்களூர்: சிஎஸ்கே - ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான போட்டி முடிவடைந்த பின், பெங்களூர் தெருக்களில் சிஎஸ்கே ரசிகர்களை ஆர்சிபி அணியின் ரசிகர்கள் கொடூரமாக துன்புறுத்திய வீடியோக்கள் சோசியல் மீடியாவில் பரவி வருகிறது. இதனால் ஆர்சிபி ரசிகர்களை கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் சோசியல் மீடியாவில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

சிஎஸ்கே - ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இரு அணிகளின் ரசிகர்களிடையே அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட போட்டியாகும். ஏனென்றால் ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபி அணி அதிகளவிலான தோல்விகளை சிஎஸ்கே அணியிடமே பெற்றிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் மறக்க முடியாத ஏராளமான தோல்விகளை ஆர்சிபி அணிக்கு சிஎஸ்கே அணி கொடுத்துள்ளது.

IPL 2025 CSK RCB Bangalore

இதனால் ஆர்சிபி ரசிகர்கள் எப்போதும் சிஎஸ்கே அணியுடனான போட்டியின் போது அதீத ஆக்ரோஷத்துடன் இருப்பார்கள். சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியின் போதே ஆர்சிபி.. ஆர்சிபி என்று ஒரு பக்கம் கோஷம் எழுந்தால், இன்னொரு பக்கம் சிஎஸ்கே.. சிஎஸ்கே என்று கோஷம் எழுந்தது. இந்த நிலையில் நேற்று பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் இரு அணிகளும் மோதின.

இந்த போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியின் போதும் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே ரசிகர்களுடையே மாற்றி மாற்றி கோஷம் எழுப்பப்பட்டு வந்தது. இந்த நிலையில் போட்டி முடிவடைந்து வெளியில் சென்ற போது, ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

சிஎஸ்கே ஜெர்சியுடன் வந்த ரசிகர் ஒருவரை ஆர்சிபி ரசிகர்கள் மோசமாக துன்புறுத்தி அடிக்க பாய்கின்றனர். அந்த நேரத்தில் காவலர் ஒருவர் சிஎஸ்கே ரசிகர்களை அழைத்து செல்கிறார். அப்போது சிஎஸ்கே அணியை மோசமாக பேசுவதோடு, ரசிகர்களையும் கடுமையான வார்த்தைகளால் விம்ர்சிக்கிறார்கள். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.

https://x.com/itisprashanth/status/1918885319329419518

இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் ஆர்சிபி ரசிகர்களை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். நேற்றைய போட்டியின் போதே, சிஎஸ்கே அணியை கலாய்க்க ஜெயில் ஜெர்சியை அணிந்தனர். கடந்த சீசனின் போதே சிஎஸ்கே அணியின் பெண் ரசிகைகளிடம் ஆர்சிபி ரசிகர்கள் மோசமாக நடந்து கொண்டது சர்ச்சையானது. தற்போது ஒவ்வொரு சீசனிலும் இந்த சம்பவம் வாடிக்கையாக தொடர்வது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Sunday, May 4, 2025, 12:49 [IST]
Other articles published on May 4, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+