Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

குட்டி ஏபிடி-னா சும்மாவா.. மொத்த பெங்களூர் மைதானமும் சைலண்ட்.. பிரெவிஸை ஓடிவந்து பாராட்டிய தோனி!

பெங்களூர்: ஆர்சிபி அணியின் தொடக்க வீரர் ஜேக்கப் பெத்தல் கொடுத்த கேட்சை முன்னாடி டைவ் அடித்து சிஎஸ்கே அணியின் டிவால்ட் பிரெவிஸ் பிடித்தது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரெவிஸ்-ன் கேட்சால் மொத்த சின்னச்சாமி மைதானமும் ஒரு நிமிடம் ஸ்டன்னான நிலையில், சிஎஸ்கே ரசிகர்கள் ஜடேஜாவுக்கு போட்டியாக ஒருவர் வந்துவிட்டதாக பாராட்டி வருகின்றனர்.

ஐபிஎல் தொடரின் 52வது லீக் போட்டியில் ஆர்சிபி அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் ஆர்சிபி அணி தரப்பில் ஜேக்கப் பெத்தல் - விராட் கோலி கூட்டணி தொடக்கம் கொடுத்தது. கலீல் அஹ்மத் வீசிய முதல் ஓவரிலேயே பெத்தல் ஹாட்ரிக் பவுண்டரி அடிக்க தொடங்கினார்.

CSK vs RCB RCB fans Stunned after Dewald Brevis took a catch against RCB playe Jacob Bether at Bangalore

இதன்பின் அன்சுல் கம்போஜ் பவுலிங்கில் விராட் கோலி சிக்சர் அடிக்க, இருவரும் அதிரடியில் பொளந்து கட்டினர். பவர் பிளே ஓவர்களுக்குள் நூர் அஹ்மத் கொண்டு வரப்பட்டும் ஆர்சிபி அணியின் அதிரடியை சிஎஸ்கே பவுலர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனிடையே பெத்தல் கொடுத்த எளிய கேட்சை பதிரானாவால் ஜடேஜா கோட்டைவிட நேர்ந்தது.

இதனை பயன்படுத்தி ஜேக்கப் பெத்தல் 28 பந்துகளில் அரைசதம் கடந்தார். ஆர்சிபி அணியின் ஸ்கோர் 9 ஓவர்களில் 94 ரன்களை எட்டியது. இந்த நிலையில் விக்கெட் வீழ்த்த வேண்டிய தேவையை அறிந்து 10வது ஓவரை வீச உடனடியாக பதிரானாவை கொண்டு வந்தார் தோனி. அந்த ஓவரின் 5வது பந்தில் பதிரானாவின் ஸ்லோயர் பந்தை கணிக்காமல் தூக்கி அடித்தார். அந்த பந்து ஸ்கொயர் லெக் திசையை நோக்கி உயரப் பறந்தது.

அப்போது விரைவாக ஸ்லோயர் லெக் திசையை நோக்கி ஓடி வந்த டிவால்ட் பிரெவிஸ், பந்து கீழே இறங்குவதை கணித்து உடனடியாக முன்னாடி டைவ் அடித்தார். டைவ் அடித்து கேட்ச் பிடித்ததோடு, உடனடியாக எழுந்து நின்று மேஜிக் கொடுத்தார். இதனால் ஜேக்கப் பெத்தல் 33 பந்துகளில் 55 ரன்களில் எடுத்து வெளியேற, தோனி வேகமாக ஓடி வந்து பிரெவிஸை பாராட்டினார்.

பிரெவிஸ் கேட்சை பார்த்த ஆர்சிபி அணியின் ரசிகர்கள் ஒரு நிமிடம் ஸ்டன்னாகினர். அதேபோல் பேட்டிங்கில் மட்டுமல்லாமல் ஃபீல்டிங்கிலும் ஏபி டி வில்லியர்ஸை போல் டிவால்ட் பிரெவிஸ் செயல்பட்டு வருகிறார். மேலும், சிஎஸ்கே அணியின் ஜடேஜாவுக்கு ஃபீல்டிங்கில் சரியான போட்டியாக பிரெவிஸ் உருவாகி வருவதாகவும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Story first published: Saturday, May 3, 2025, 20:40 [IST]
Other articles published on May 3, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+