Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டாஸ் வென்ற ஆர்சிபி அணி.. பேட்டிங்கை தேர்வு செய்த டூ பிளஸிஸ்.. சிஎஸ்கே பிளேயிங் லெவனில் யார்?

சென்னை : சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

17வது சீசனுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கியுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணியை எதிர்த்து ஆர்சிபி அணி களமிறங்கியுள்ளது. கடந்த சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் என்று பெயர் வைத்திருந்த நிலையில், இந்த சீசனுக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

CSK vs RCB RCB won the toss and chose to bat against CSK in the opening game of the IPL 2024 at Chepauk

கண்ணாடியை திருப்பினால் ஆட்டோ ஓடாது என்று புரிந்தாலும், பெயர்மாற்றம் ஆர்சிபி அணிக்கு பலன் கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதேபோல் சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் முதல்முறையாக களமிறங்கியுள்ளார். தொடர்ந்து போடப்பட்ட டாஸில் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் டூ பிளஸிஸ், பேட்டிங்கை தேர்வு செய்வதாக அறிவித்தார்.

சேப்பாக்கம் மைதானம் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், அட்டாக் செய்வதற்காக டூ பிளஸிஸ் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். அதேபோல் சேப்பாக்கம் மைதானத்தில் முதல் பேட்டிங் செய்யும் அணிகளே அதிக முறை வெற்றிபெற்றுள்ளது. ஆர்சிபி அணியில் வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்துவீச்சாளர் அல்ஜாரி ஜோசப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல் ஸ்பின்னரான மயங்க் டாகர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து டூ பிளஸிஸ் பேசுகையில், சேப்பாக்கம் மைதானம் முதல் பேட்டிங்கிற்கு உதவியாக இருக்கும். நீண்ட இடைவெளிக்கு பின் சென்னையில் விளையாடுகிறேன். ஆனால் ஆர்சிபி அணி பக்கம் இருக்கிறேன். சிறப்பாக தயாராகி வந்துள்ளோம். பவுலிங்கில் தேவையான திறமையான வீரர்கள் உள்ளார்கள். பேக் அப் வீரர்கள் சரியாக கிடைத்திருக்கிறார்கள். காயங்கள் பற்றி கவாலியில்லை என்று தெரிவித்தார்.

சிஎஸ்கே அணியை பொறுத்தவரை உள்ளூர் வீரரான சமீர் ரிஸ்வி, ரச்சின் ரவீந்திரா, டேரல் மிட்சல், முஷ்டாஃபிகுர் ரஹ்மான் ஆகியோர் முதல்முறையாக சிஎஸ்கே அணிக்காக களமிறங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஷர்துல் தாக்கூருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் இன்பேக்ட் வீரர்களான ஷர்துல் தாக்கூர், ஷேக் ரஷீத், நிஷாந்த் சிந்து, மொயின் அலி மற்றும் சிவம் துபே ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சிஎஸ்கே அணி விவரம் : ருதுராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா, அஜிங்கியா ரஹானே, டேரல் மிட்சல், ஜடேஜா, சமீர் ரிஸ்வி, தோனி, தீபக் சஹர், தீக்சனா, முஷ்டாஃபிசுர் ரஹ்மான், துஷார் தேஷ்பாண்டே

ஆர்சிபி அணி விவரம் : டூ பிளஸிஸ், விராட் கோலி, கேமரூன் க்ரீன், மேக்ஸ்வெல், பட்டிதர், தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத், மயங்க் டாகர், முகமது சிராஜ், அல்ஜாரி ஜோசப், கரண் சர்மா

Story first published: Friday, March 22, 2024, 19:50 [IST]
Other articles published on Mar 22, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+