Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK: விராட் கோலி கேட்சை கோட்டை விட்ட சிவம் துபே.. தலையில் கை வைத்து கலீல் அகமது

பெங்களூரு: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய மூன்றாவது லீக் ஆட்டத்தில் இன்று பலம் வாய்ந்த ஆர்சிபி அணியை எதிர்கொள்கிறது. பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனை அடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணி வீரர்கள் முதல் சில ஓவர்களில் தடுமாறினர். பெங்களூர் சின்னசாமி மைதானம் ரன் குவிப்புக்கு சாதகமானதாகும். இதனால் பவர் பிளேவில் ஆர்சிபி அணியின் விக்கெட்டை வீழ்த்தினால், அது சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும்.

CSK vs RCB

ஏற்கனவே நம்பிக்கை இல்லாமல் தடுமாறும் பவுலர்களுக்கு பவர் பிளேவிலே விக்கெட் கிடைத்தால் அது அவருடைய நம்பிக்கையை பல மடங்கு அதிகரிக்கும். இந்த சூழலில் தான் விராட் கோலி 6 ரன்கள் எடுத்து இருந்தபோது கலில் அகமதின் பந்துவீச்சை தூக்கி அடித்தார். அப்போது மிட் ஆன் பகுதியில் நின்று கொண்டிருந்த சிவம் துபே கொஞ்சம் தூரம் ஓடி பந்தை பிடிக்க முற்பட்டபோது பந்தை சரியாக கனிக தவறி கேச்சை மிஸ் செய்தார்.

இது விராட் கோலிக்கு மிகப்பெரிய லைப் கிடைத்தது. சிவம் துபே கேட்சை கோட்டை விட்டதைப் பார்த்த சிஎஸ்கே பவுலர் கலீல் அகமத் நம்ப முடியாமல் கீழே அமர்ந்து கையை தலையில் வைத்துக்கொண்டார். இந்த சம்பவம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது விராட் கோலி வெறும் ஆறு ரன்கள் தான் அடித்தார் ஆனால் அதன் பின்பு தமக்கு கிடைத்த வாய்ப்பை அவர் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார்.

18 பந்துகளை எதிர்கொண்ட அவர் 28 ரன்கள் எடுத்து கொண்ட நிலையில் மீண்டும் அன்சூல் காம்போஜ் பந்துவீச்சில் சிவம் துபே விடமே கேட்ச் ஆகி வெளியேறினார். விராட் கோலி கூடுதலாக 22 ரன்கள் அடித்திருந்தார். ஆனால் கோலி கடைசி வரை நின்று இருந்தால் இன்னும் கூடுதல் ரன்களை அடித்திருப்பார்.சிஎஸ்கே அணி ஏற்கனவே வெற்றி இல்லாமல் தடுமாறும் நிலையில் சுலபமான கேட்சுகளை பில்டிங்கில் விடுவது ரசிகர்களை கோபமடைய வைத்திருக்கிறது.

Story first published: Sunday, April 5, 2026, 20:24 [IST]
Other articles published on Apr 5, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+