Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே-வை வைத்து ரோஹித் சர்மாவின் பிரம்மாண்ட ஐபிஎல் ரெக்கார்டை உடைத்த விராட் கோலி

பெங்களூர்: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியில் விராட் கோலி புதிய உலக சாதனை படைத்துள்ளார். அதிலும் சிஎஸ்கே அணியை வைத்து இந்த சாதனையை படைத்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற ரோஹித் சர்மாவின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.

விராட் கோலி, சிஎஸ்கே அணிக்கு எதிரான இந்தப் போட்டிக்கு முன்னதாக ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடிக்க 2 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆட்டத்தின் முதல் ஓவரின் 5வது பந்திலேயே 2 ரன்கள் எடுத்ததன் மூலம் அவர் இந்த வரலாற்று மைல்கல்லை எட்டினார். தற்போது டி20 கிரிக்கெட்டில் சிஎஸ்கே அணிக்கு எதிராக 37 போட்டிகளில் விளையாடி 1162 ரன்கள் எடுத்துள்ளார் விராட் கோலி.

CSK vs RCB Virat Kohli Breaks Rohit Sharma s Massive T20 Record Against CSK in IPL 2026 Match at Bengaluru

இதற்கு முன்னதாக ரோஹித் சர்மா கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 36 போட்டிகளில் 1161 ரன்கள் எடுத்ததே உலக சாதனையாக இருந்தது. அதனை தற்போது விராட் கோலி தனது கோட்டையான பெங்களூருவில் வைத்து தகர்த்துள்ளார். ஐபிஎல் தொடரில் மட்டும் பார்த்தால் ரோஹித் சர்மா 1161 ரன்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். விராட் கோலி சிஎஸ்கே அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் மேலும் 16 ரன்களை கடந்த நிலையில் ஐபிஎல் தொடரிலும் ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்தார்.

டி20 கிரிக்கெட்டில் ஒரு அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த வீரர்கள்:

விராட் கோலி - 1162 ரன்கள் (எதிரணி: சென்னை சூப்பர் கிங்ஸ்)
ரோஹித் சர்மா - 1161 ரன்கள் (எதிரணி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)
விராட் கோலி - 1159 ரன்கள் (எதிரணி: பஞ்சாப் கிங்ஸ்)
விராட் கோலி - 1154 ரன்கள் (எதிரணி: டெல்லி கேப்பிடல்ஸ்)
டேவிட் வார்னர் - 1134 ரன்கள் (எதிரணி: பஞ்சாப் கிங்ஸ்)

சிஎஸ்கே அணிக்கு எதிராக 1000 ரன்களுக்கு மேல் குவித்திருப்பது மட்டுமின்றி, பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் என நான்கு வெவ்வேறு ஐபிஎல் அணிகளுக்கு எதிராக 1000 ரன்களுக்கு மேல் விளாசிய ஒரே வீரர் விராட் கோலி என்பது குறிப்பிடத்தக்கது. 2026 ஐபிஎல் தொடரின் தொடக்கத்திலேயே விராட் கோலி இத்தகைய பிரம்மாண்ட சாதனையை நிகழ்த்தியது அவரது ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது. சிஎஸ்கே அணிக்கு எதிராக கோலி தனது ஆதிக்கத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.

Story first published: Sunday, April 5, 2026, 20:04 [IST]
Other articles published on Apr 5, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+