IPL 2026: சிறப்பான ஆளு நீ! கோலி அடித்த நோ லுக் சிக்சர்.. மைதானத்தில் கொண்டாடிய மனைவி அனுஷ்கா சர்மா
மும்பை: ஐபிஎல் 2026 சீசனில் பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு , சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. ஆட்டத்தை காண விராட் கோலியின் மனைவி அனுஷ்கா ஷர்மா வந்திருந்தார். கோலி அடித்த 'நோ-லுக்' சிக்ஸருக்குப் பிறகு அவர் காட்டிய ரியாக்ஷன் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆர்சிபி அணிக்காக தொடக்க வீரராக களமிறங்கிய விராட் கோலி, 18 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். இதில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். ஃபில் சால்ட்டுடன் (30 பந்துகளில் 46 ரன்கள்) இணைந்து 4.3 ஓவர்களில் 37 ரன்கள் சேர்த்தார். ஐந்தாவது ஓவரில் அன்ஷுல் கம்போஜ் பந்துவீச்சில் சிவம் துபேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

குறிப்பாக இந்தப் போட்டியில் கோலி அடித்த நோ லுக் சிக்சர், ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக மைதானத்தில் இருந்த அனுஷ்கா சர்மா, இந்த சிக்சரை பார்த்து மகிழ்ச்சியில் சிரித்தார். தோனி ஸ்டைலான இந்த சிக்சரை, அவர்களது ரசிகர்களுக்காக கோலி அடித்திருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐபிஎல் 2026 தொடரின் முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிராக 38 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 69 ரன்கள் விளாசிய விராட் கோலி, இப்போட்டியிலும் நல்ல தொடக்கத்தைப் பெற்றார். ஆயினும், அதனை ஒரு பெரிய இன்னிங்ஸாக மாற்றும் வாய்ப்பை அவர் தவறவிட்டார்.
மைதானத்தை விட்டு வெளியேறும் முன், விராட் கோலி ஒட்டுமொத்த டி20, ஐபிஎல்லில் ஒரு அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த சாதனையை முறியடித்து வரலாறு படைத்தார். ஐபிஎல் வரலாற்றின் அதிக ரன் குவிப்பாளரான இவர், சிஎஸ்கேவுக்கு எதிராக 37 டி20ல் 1188 ரன்களையும், 36 ஐபிஎல் போட்டிகளில் 1174 ரன்களையும் குவித்துள்ளார்.
இப்பட்டியலில் இந்திய அணியின் ரோஹித் ஷர்மா இரண்டாவது இடத்தில் உள்ளார். ரோஹித், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக இதுவரை 36 டி20 போட்டிகளில் மொத்தம் 1161 ரன்கள் எடுத்துள்ளார்.
இந்த ஞாயிற்றுக்கிழமை சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் மேலும் மூன்று சிக்ஸர்களை அடித்திருந்தால், ஐபிஎல் வரலாற்றில் ஒரே அணிக்காக 300 சிக்ஸர்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்திருப்பார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக தனது 269வது ஐபிஎல் ஆட்டத்தில் விளையாடிய கோலியின் மொத்தம் சிக்ஸர்களின் எண்ணிக்கை தற்போது 297 ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications