Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK vs RCB: ஆர்சிபி கடைசியாக சென்னையில் வென்ற போது, உலகம் எப்படி இருந்தது தெரியுமா?

சென்னை: 2008 ஆம் ஆண்டுதான் ஆர்சிபி அணி கடைசியாக சேப்பாக்கத்தில் சிஎஸ்கேவை வீழ்த்தியது. அதன் பிறகு 16 ஆண்டுகளாக சிஎஸ்கே அணியை சேப்பாக்கம் மைதானத்தில், ஆர்சிபி வீழ்த்தியதில்லை. 2008ஆம் ஆண்டு ஒரு குழந்தை பிறந்திருந்தால், அது தற்போது பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதி இருக்கும்.

அந்த அளவுக்கு, ஆர்சிபி அணி சேப்பாக்கம் மைதானத்தில் தடுமாறி வருகிறது. இந்த சூழலில், ஆர்சிபி கடைசியாக வென்ற போது, உலகம் எப்படி இருந்தது என்பதை தற்போது பார்க்கலாம். அப்போது
தோனி தான் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக தனது முதல் ஆண்டில் இருந்தார்.

CSK vs RCB

தற்போது ஐசிசி தலைவராக இருக்கும் ஜெய் ஷா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார், பிசிசிஐ செயலாளராகும் எண்ணம் கூட அவருக்கு இல்லை.ரோஹித் சர்மா தனது முதல் சர்வதேச சதத்தை அடிக்கவில்லை. விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகவில்லை. ஆனால் தற்போது உலகிக் முன்னணி வீரராக விளங்கி வருகிறார். தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் பணி புரிந்து கொண்டு இருந்தார். இந்தியாவில் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிராஸ் ஆட்சியும், தமிழ்நாட்டில் கருணாநிதி முதலமைச்சராக பணியாற்றி வந்தார்.

இந்தியாவில் 3ஜி நெட்வொர்க் சேவை அறிமுகமாகவில்லை. அவ்வளவு ஏன் இணைய சேவையை நம் ஊரில் எல்லாம் வந்திருக்கவே வந்திருக்காது. தற்போது உலகையே கட்டி ஆளும் முதல் ஆண்ட்ராய்டு போன் அறிமுகப்படுத்தப்படவில்லை. பெரும்பாலான இந்தியர்கள் சமூக வலைதளமான ஆர்குட்டைப் பயன்படுத்தினர்.

பிளேஸ்டேஷன் 3 மற்றும் எக்ஸ்பாக்ஸ் 360 ஆகியவை தான் புதிய கேமிங் கன்சோல்களாக இருந்தன.
மார்வெலின் MCU அயர்ன் மேன் (2008) திரைப்படத்துடன் தான் தொடங்கியது.நெட்ஃபிலிக்ஸ் அப்போது டிவிடி வாடகை சேவையாக மட்டுமே இருந்தது - ஸ்ட்ரீமிங் சேவை தொடங்கப்படவில்லை, இப்படி உலகமே இந்த 16 ஆண்டுகள் மாறிவிட்டது. ஆனால், சென்னையில் ஆர்சிபி தோல்வியை தழுவுவது மட்டும் மாறவில்லை.

Story first published: Friday, March 28, 2025, 14:12 [IST]
Other articles published on Mar 28, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+