Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அதே கடைசி ஓவர்.. அதே தோனி - ஜடேஜா பேட்டிங்.. 2வது முறையாக சிஎஸ்கே வெற்றியை பறித்த சந்தீப் சர்மா!

கவுஹாத்தி: 2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக ஆடிய சந்தீப் சர்மா கடைசி ஓவரில் மாற்றினார். தற்போது மீண்டும் 2025ஆம் ஆண்டு மீண்டும் தோனி - ஜடேஜாவை ஸ்ட்ரைக்கில் வைத்து கொண்டே கடைசி ஓவரில் சிஎஸ்கே வெற்றியை பறித்துள்ளார். இதனால் சந்தீப் சர்மாவை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

18வது ஐபிஎல் தொடரின் 11வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியிடம் 6 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி தோல்வியை சந்தித்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணி நிதிஷ் ராணாவின் அதிரடியான ஆட்டத்தால், 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்களை குவித்தது. இதன்பின் வந்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்களை சேர்த்து தோல்வியடைந்தது.

CSK vs RR After 2023 Sandeep Sharma once again defended the Score for RR in the last over against Dhoni and Jadeja in IPL 2025

இதன் மூலமாக 2021ஆம் ஆண்டுக்கு பின் 175 ரன்களுக்கு மேல் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை சிஎஸ்கே அணி ஒருமுறை கூட சேஸிங் செய்ததில்லை என்ற சாதனையை தொடர்ந்து வருகிறது. இதற்கு மிடில் ஆர்டரில் சிஎஸ்கே அணிக்கு வலுவான ஹிட்டர்கள் இல்லை என்பதே காரணமாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இப்படி தோற்ற 7 போட்டிகளிலும் சிஎஸ்கே அணியே டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றிபெற்றதற்கு பவுலர்கள் மற்றும் ஃபீல்டிங் முக்கிய காரணமாக அமைந்தது. அதேபோல் ரியான் பராக் சிறந்த முடிவுகளை களத்தில் எடுத்தார். கடைசி ஓவரை ஆர்ச்சர் வீசுவார் என்று பார்க்கப்பட்ட போது, தைரியமாக சந்தீப் சர்மா கைகளில் பந்தை கொடுத்தார் ரியான் பராக். சந்தீப் சர்மாவும் சிறப்பாக செயல்பட்டு நம்பிக்கையை காப்பாற்றி உள்ளார்.

ஏனென்றால் கடைசி ஓவரில் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு 20 ரன்கள் தேவையாக இருந்தது. தோனி - ஜடேஜா ஸ்ட்ரைக்கில் இருக்கும் போது, பவுலர்கள் கூடுதல் அழுத்தத்திற்கு ஆளாவார்கள். இதனால் தோனிக்கான லைன் மற்றும் லெந்தில் பந்துவீசிவிடுவார்கள். ஆனாலும் சந்தீப் சர்மா முதல் பந்திலேயே லோ-ஃபுல் டாஸ் மூலம் தோனியின் விக்கெட்டை கைப்பற்றினார். இதனால் ஆட்டத்தில் எளிதாக வெல்ல முடிந்தது.

ஏற்கனவே இதுபோல் சந்தீப் சர்மா சிஎஸ்கே அணிக்கு எதிராக கடைசி ஓவரில் ஆட்டத்தை திருப்பி இருக்கிறார். 2023ஆம் ஆண்டு நடைபெற்ற லீக் போட்டியில் சிஎஸ்கே அணி வெல்வதற்கு 21 ரன்கள் தேவையாக இருந்தது. அப்போதும் தோனி - ஜடேஜா ஸ்ட்ரைக்கில் இருந்தனர். ஆனால் தோனிக்கு எதிராக சிறப்பாக பவுலிங் செய்த சந்தீப் சர்மா, ராஜஸ்தான் அணியை 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்துள்ளார்.

Story first published: Monday, March 31, 2025, 0:24 [IST]
Other articles published on Mar 31, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+