Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எப்படி வேலையை செஞ்சு முடிக்கிறதுன்னு தோனி கிட்டதான் கத்துக்கணும்.. அடிபட்ட ராஜஸ்தான் வீரர் பேச்சு!

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் இடையே ஆன 12வது ஐபிஎல் போட்டியில் சென்னை அணி கடைசி ஓவரில் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் கடைசி ஓவர் வரை தன் அணியை எடுத்து வந்த பென் ஸ்டோக்ஸ், அணியின் தோல்வி குறித்தும், தோனி எப்படி இந்தப் போட்டியை எடுத்துச் சென்றார் என்பது குறித்தும் பேசினார் தோனியிடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

நிதானம் + அதிரடி

நிதானம் + அதிரடி

இந்தப் போட்டியில் சென்னை அணி 27 ரன்களுக்கு 3 விக்கெட்கள் இழந்து தவித்த போது தோனி நிதானமாக ஆடி, கடைசி மூன்று ஓவர்களில் அதிரடி காட்டி அணியை 175 ரன்களுக்கு இட்டுச் சென்றார்.

கற்றுக் கொள்ள வேண்டும்

கற்றுக் கொள்ள வேண்டும்

இது குறித்து பேசிய பென் ஸ்டோக்ஸ், "தோனி எப்படி போட்டியை அதன் கடைசி வரை எடுத்துச் சென்று வேலையை முடிக்கிறார் என்பதை கற்றுக் கொள்ள வேண்டும். உலகின் சிறந்த வீரர்கள் தான் இதை செய்வார்கள். அதை இன்று தோனி கண்முன் காட்டினார்" என்றார்.

மூன்று சிக்ஸர்

மூன்று சிக்ஸர்

தோனி கடைசி மூன்று ஓவர்களுக்கு முன்பு வரை ஒரு பந்துக்கு ஒரு ரன் என்ற கணக்கில் ரன் எடுத்து வந்தார். பின்னர் அதிரடி காட்டியவர், கடைசி ஓவரின் கடைசி மூன்று பந்துகளில் சிக்ஸர் பறக்கவிட்டு அசத்தினார்.

ஸ்டோக்ஸ் போராட்டம்

ஸ்டோக்ஸ் போராட்டம்

மறுபுறம் பென் ஸ்டோக்ஸ், தன் அணியின் வெற்றிக்காக சேஸிங்கில் கடைசி ஓவர் வரை போராடினார். எனினும், கடைசி ஓவரின் முதல் பந்தில் அவர் ஆட்டமிழக்க, அந்த அணிக்கு அது பெரும் பின்னடைவாக அமைந்து தோல்வியை சந்தித்தது.

Story first published: Monday, April 1, 2019, 20:59 [IST]
Other articles published on Apr 1, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+