For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மனதை குளிர்வித்த தோனி.. பயங்காட்டிய ராஜஸ்தான் கூட்டணி.. கடைசி ஓவரில் பிராவோ.. சென்னை தொடர் வெற்றி!!

Recommended Video

IPL 2019: Chennai vs Rajasthan | கடைசி ஓவரில் பிராவோ, சென்னை தொடர் வெற்றி!!

சென்னை : ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

1
43422

இந்தப் போட்டியில் தோனி அதிரடி ஆட்டம் ஆடியது அவரது ரசிகர்கள் மனதை குளிர்வித்துள்ளது. ராஜஸ்தான் அணி கடைசி ஓவர் வரை வெற்றிக்கு அருகே வந்து, மிரட்டினாலும் தோனியின் அனுபவம் அவர்களை வீழ்த்தியது என்றே சொல்ல வேண்டும்.

அடுத்த தடவை ஜோசியம் பார்த்துட்டு ரன் ஓடுங்கப்பா.. ஒரே பந்தில் ரன் அவுட்டான 2 பெங்களூர் வீரர்கள்!! அடுத்த தடவை ஜோசியம் பார்த்துட்டு ரன் ஓடுங்கப்பா.. ஒரே பந்தில் ரன் அவுட்டான 2 பெங்களூர் வீரர்கள்!!

சரியான தேர்வு

சரியான தேர்வு

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அவர்கள் தேர்வு செய்தது சரிதான் என்பது போல, சென்னை அணியின் அம்பதி ராயுடு 1, ஷேன் வாட்சன் 13, கேதார் ஜாதவ் 8 வெளியேறினர்.

நல்ல ஸ்கோரை எட்டுமா?

நல்ல ஸ்கோரை எட்டுமா?

சென்னை அணி 4.5 ஓவர்களில் 27 ரன்களுக்கு 3 விக்கெட்கள் இழந்து தவித்து வந்தது, அப்போது தோனி - சுரேஷ் ரெய்னா ஜோடி சேர்ந்தனர். இருவரும் ரன் ரேட் ஆறுக்கும் கீழ் போகாதபடி பார்த்துக் கொண்டனர். இவர்கள் இப்படி ஆடியதால், சென்னை அணி 130-140 ரன்களை எட்டினால் பெரிது என்ற நிலை இருந்தது.

தோனி அதிரடி

தோனி அதிரடி

ரெய்னா 32 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து பிராவோ 16 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து கடைசி 3 ஓவர்களில் ரன் ரேட்டை சிறிது ஏற்றினார். இதே நேரம், தோனியும் அதிரடி காட்டத் துவங்கினார். பின்னர் ஜடேஜா கடைசி ஓவரில் ஒரு சிக்ஸ் அடித்து அணிக்கு உதவினார்.

தோனி சிக்ஸர்கள்

தோனி சிக்ஸர்கள்

கடைசி ஓவரின் கடைசி மூன்று பந்துகளை சந்தித்த தோனி, ஒரு வைடு தவிர்த்து மூன்று சிக்ஸர்கள் அடித்தார். 20 ஓவர்கள் முடிவில் சென்னை 175 ரன்கள் குவித்து அசத்தியது. தோனி 46 பந்துகளில் 75 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் மட்டும் 28 ரன்கள் கிடைத்தது.

ராஜஸ்தான் பந்துவீச்சு

ராஜஸ்தான் பந்துவீச்சு

ராஜஸ்தான் அணியில் ஆர்ச்சர் ஓவருக்கு 4.25, கோபால் ஓவருக்கு 7.66, கெளதம் ஓவருக்கு 6.50 என குறைந்த அளவு ரன் கொடுத்தனர். ஜெயதேவ் 4 ஓவர்களில் 54 ரன்கள் கொடுத்து பரிதாபமாக காட்சி அளித்தார். ஆர்ச்சர் 2, குல்கர்னி, ஸ்டோக்ஸ், ஜெயதேவ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

ராஜஸ்தான் சரிவு

ராஜஸ்தான் சரிவு

ராஜஸ்தான் அணி 176 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடத் துவங்கிய 2வது பந்திலேயே கேப்டன் ரஹானேவை இழந்தது. அடுத்து பட்லர் 6, சஞ்சு சாம்சன் 8 ரன்களில் ஆட்டமிழக்க, 14 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

கிலி காட்டிய கூட்டணி

கிலி காட்டிய கூட்டணி

பின்னர் ராகுல் திரிபாதி 39, ஸ்டீவ் ஸ்மித் 28 ரன்கள் சேர்த்து அணிக்கு உதவினர். கெளதம் 9 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். 17, 18, 19வது ஓவர்களில் பென் ஸ்டோக்ஸ் - ஆர்ச்சர் கூட்டணி ரன் குவிப்பில் ஈடுபட்டு சென்னை அணிக்கு கிலி காட்டியது.

கடைசி ஓவரில் பிராவோ

கடைசி ஓவரில் பிராவோ

கடைசி ஓவரில் 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு எடுத்து வந்தது இந்த கூட்டணி. கடைசி ஓவரை பிராவோ வீச, முதல் பந்தில் ஸ்டோக்ஸ், ஐந்தாம் பந்தில் கோபால் ஆட்டமிழந்தனர். அந்த ஓவரில் 3 ரன்கள் மட்டுமே கொடுத்த பிராவோ சென்னையின் வெற்றியை உறுதி செய்தார். சென்னை 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தாஹிர் - சாஹர் அசத்தல்

தாஹிர் - சாஹர் அசத்தல்

இந்தப் போட்டியில் சென்னை அணியின் இம்ரான் தாஹிர் 4 ஓவர்களில் 23 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். தீபக் சாஹர் 4 ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். பிராவோ 4 ஓவர்களில் 32 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்கள் வீழ்த்தினார்.

முதல் இடம்

முதல் இடம்

2019 ஐபிஎல் தொடரில் தொடர்ந்து முதல் மூன்று போட்டிகளில் வென்று வெற்றிநடை போட்டு வருகிறது சென்னை சூப்பர் கிங்ஸ். புள்ளிகள் பட்டியலிலும் முதல் இடத்தை பிடித்துள்ளது.

Story first published: Monday, April 1, 2019, 10:51 [IST]
Other articles published on Apr 1, 2019
English summary
CSK vs RR : Chennai Super Kings beat Rajsathan Royals and won straight 3rd match in IPL 2019
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X