For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தல தோனி பேட்டிங் ஆடினா.. பெயில்ஸ் கூட கீழ விழாது.. "தல"கால் புரியாமல் கொண்டாடும் ரசிகர்கள்!!

Recommended Video

Dhoni effect bails | கேப்டன் தோனியை கொண்டாடும் ரசிகர்கள்

சென்னை : 2019 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் ஆடிய போட்டியில் தோனி கிட்டதட்ட ஆட்டமிழக்க வேண்டிய சூழ்நிலையில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பினார்.

தோனி ரசிகர்கள் "தல" விக்கெட்டை இப்படி எல்லாம் எடுத்துவிட முடியுமா? என சமூக வலைதளத்தை தெறிக்கவிட்டு வருகிறார்கள்.

இதுக்கெல்லாமா அவுட் கொடுப்பீங்க? பட்லரிடம் ஏமாந்த அம்பயர்.. ரிவ்யூவால் தப்பிய வாட்சன்! இதுக்கெல்லாமா அவுட் கொடுப்பீங்க? பட்லரிடம் ஏமாந்த அம்பயர்.. ரிவ்யூவால் தப்பிய வாட்சன்!

தோனி பேட்டிங்

தோனி பேட்டிங்

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை முதலில் பேட்டிங் செய்தது. சென்னை அணி 4.5 ஓவர்களில் 27 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த போது பேட்டிங் ஆட வந்தார் தோனி.

நிதான ஆட்டம்

நிதான ஆட்டம்

முதலில் நிதானமாக ரன் சேர்க்கத் துவங்கினார் தோனி. 5வது ஓவரின் 4வது பந்தை ராஜஸ்தான் வீரர் ஆர்ச்சர் வீசினார். அப்போது தோனி பந்தை தடுத்து ஆட முற்பட்டார். பந்து அவரது பேட்டில் பட்டு கீழே உருண்டு சென்றது.

ஸ்டம்ப்பில் மோதி…

உருண்டு சென்ற பந்து, பின்னே இருந்த ஸ்டம்ப்பில் மோதி நின்றது. அப்போது பெயில்ஸ் கீழே விழும், அல்லது அசையும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அப்படி எதுவும் நடக்கவில்லை.

ரசிகர்கள் கொண்டாட்டம்

ரசிகர்கள் கொண்டாட்டம்

"பந்து ஸ்டம்ப்பில் பட்டும் பெயில்ஸ் கீழே விழவில்லை" என்பதை பிடித்துக் கொண்ட தோனி ரசிகர்கள் இதைக் கொண்டாடி வருகிறார்கள். "தல தோனி பேட்டிங் ஆட நின்னா, பெயில்ஸ் கூட கீழே விழாது" என கூறி தோனியை கொண்டாடினர்.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

இது ஒருபுறம் இருக்க, இந்தப் போட்டியில் தோனி 46 பந்துகளில் 75 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். கடைசி நேரத்தில் தனி ஒருவனாக சென்னை அணியை தன் பேட்டிங் மூலம் மீட்டார் தோனி. கடைசி ஓவரில் மட்டும் 3 சிக்ஸர்கள் அடித்தார் தோனி.

Story first published: Sunday, March 31, 2019, 22:48 [IST]
Other articles published on Mar 31, 2019
English summary
CSK vs RR : Dhoni escaped from getting out after ball touch the stumps
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X