For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கடைசி வரைக்கும் இந்த ஒரு மேட்ச் போதும்யா.. தோனியின் அதிரடி ஆட்டத்தை பார்த்து நெகிழ்ந்த ரசிகர்கள்!

Recommended Video

IPL 2019: Chennai vs Rajasthan | தோனியால் ராஜஸ்தானுக்கு 176 ரன்கள் வெற்றி இலக்கு

சென்னை : 2019 ஐபிஎல் தொடர் சில சதங்களை பார்த்து விட்டது. ஹைதராபாத் அணியில் ஒரே போட்டியில் இரண்டு வீரர்கள் சதம் அடித்தனர். ஆனால், அது எல்லாவற்றையும் விட பெரிய இன்னிங்க்ஸ் என்றால், அது ராஜஸ்தான் போட்டியில் தோனி ஆடியது தான் என தோனி ரசிகர்கள் கூறி இருக்கிறார்கள்.

ராஜஸ்தான் போட்டியில் மற்ற பேட்ஸ்மேன்கள் கைவிட்டாலும் தோனி அதிரடி காட்டி, சென்னை அணியை 175 ரன்கள் என்ற நிலைக்கு எடுத்துச் சென்றார்.

ரெய்னாவுடன் ஜோடி சேர்ந்தார்

ரெய்னாவுடன் ஜோடி சேர்ந்தார்

இந்தப் போட்டியில் துவக்க வீரர்கள் அம்பதி ராயுடு 1, ஷேன் வாட்சன் 13 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினர். அடுத்து ஜாதவ் 8 ரன்களில் வெளியேற, சுரேஷ் ரெய்னாவுடன் ஜோடி சேர்ந்தார் தோனி.

பந்துக்கு ஒரு ரன்

பந்துக்கு ஒரு ரன்

இருவரும் நிதானமாக ரன்களை சேர்த்தனர். 12 ரன்கள் அடித்த பின் ஒரு பந்துக்கு ஒரு ரன் என்ற நிலையில் தொடர்ந்து ஆடி வந்தார் தோனி. ரெய்னா 36 ரன்களில் ஆட்டமிழந்த பின், பிராவோவுடன் கூட்டணி சேர்ந்தார்.

கடைசி ஓவர்கள்

கடைசி ஓவர்கள்

17 ஓவர்களில் சென்னை அணி 115 ரன்களுக்கு 4 விக்கெட்கள் இழந்து 140-150 என சற்றே சிறிய அளவு ஸ்கோரை தான் எட்டும் என்ற நிலையில் இருந்தது. அப்போது தோனி - பிராவோ அதிரடி காட்டினர். 18வது ஓவரில் 24 ரன்கள் சேர்த்தனர். தோனி ஒரு சிக்ஸ், பிராவோ ஒரு சிக்ஸ், ஒரு ஃபோர் அடித்தார்.

19வது ஓவர்

19வது ஓவர்

19வது ஓவரில் பிராவோவும் வெளியேறினார். சென்னை அணி 147 ரன்களுக்கு 5 விக்கெட்கள் இழந்து இருந்தது. கடைசி ஓவரில் ஜடேஜா ஒரு சிக்ஸ் அடித்தார். கடைசி மூன்று பந்துகளை சந்தித்தார் தோனி.

இப்ப சிக்ஸ் அடிச்சா..

இப்ப சிக்ஸ் அடிச்சா..

தோனி இப்போது சிக்ஸ் அடித்தால் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருந்தது. அதே போல, ஒரு வைடு தவிர்த்து, கடைசி மூன்று பந்துகளிலும் சிக்ஸர் அடித்தார் தோனி. அதைக் கண்ட தோனி ரசிகர்கள், இது தான் எங்க பழைய தோனி என கொண்டாடித் தீர்த்தனர். இந்த இன்னிங்க்ஸில் 46 பந்துகளில் 75 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார் தோனி.

நெகிழ்ச்சி

நெகிழ்ச்சி

கடந்த ஆண்டு மோசமாக பேட்டிங் செய்த போது வந்த விமர்சனங்கள், இந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக ரன் குவித்தும், மெதுவாக ஆடுகிறார் என்ற குற்றச்சாட்டுக்கள் என தோனியை விமர்சிப்பதை பார்த்துப் பார்த்து சலித்த தோனி ரசிகர்கள்.. இன்று தோனி ஆடியதை பார்த்து உற்சாகம் அடைந்தனர். "யாரு என்ன சொன்னா எங்களுக்கு என்ன.. இந்த ஒரு ஆட்டம் போதும் எங்களுக்கு!" என நெகிழ்ச்சி அடைந்தனர்.

Story first published: Sunday, March 31, 2019, 23:22 [IST]
Other articles published on Mar 31, 2019
English summary
CSK vs RR : Dhoni guided CSK team to 175 runs while others failed
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+