வரும் போது பார்த்துக்கலாம்.. படு கேஷுவலாக இருக்கும் சென்னை வீரர்கள்.. தோனி தான் காரணம்!
Recommended Video

சென்னை : 2019 ஐபிஎல் தொடரில் தான் ஆடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று மூன்றாவது போட்டிக்கு தயாராகி வருகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
பயிற்சியில் மற்ற அணிகள் எல்லாம் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டு இருக்கையில், சென்னை அணி வீரர்கள் படு சாதாரணமாகவே பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எது வந்தாலும்..
"எது வந்தாலும், வரும் போது பார்த்துக்கலாம்" என கேப்டன் தோனி இருப்பதால் தில்லாக அமர்ந்து கொண்டு இருக்கிறது சிஎஸ்கே படை. அதற்கு இந்த புகைப்படமே சாட்சி.
அமைதிக்கு காரணம்
ஜடேஜா, ரெய்னா என சென்னை அணியில் பெரும்பாலானோர் அனுபவ வீரர்கள் என்பதாலேயே இந்த அமைதி, சாதாரண மனநிலை அங்கே நிலவுகிறது. இது போட்டியின் போதும் வெளிப்படுவதை நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.

அவர்களது பலம் என்ன?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வயதானவர்கள் அணி என்ற விமர்சனம் இருந்தாலும், அது தான் அவர்களது பலம். அந்த பலத்தோடு ராஜஸ்தான் அணியை தன், மூன்றாவது போட்டியில் சந்திக்க உள்ளது சென்னை அணி.

சிஎஸ்கே அடுத்த போட்டி?
முதல் இரண்டு போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி கேபிடல்ஸ் அணிகளை சுழற் பந்துவீச்சு மூலம் வீழ்த்திய சென்னை அணி, அடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சந்திக்க உள்ளது.

ராஜஸ்தான் நிலைமை
ராஜஸ்தான் அணி தன் முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது. சென்னை அணிக்கு எதிராகவாவது வெற்றி பெற முடியுமா என ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் மோதும் போட்டி இன்று இரவு எட்டு மணிக்கு நடைபெற உள்ளது.


Click it and Unblock the Notifications