Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதுதான் வளர்ச்சி.. ரியான் பராக் முன் டான்ஸ் ஆடும் நடிகை சாரா அலி கான்.. கிண்டல் செய்யும் ரசிகர்கள்!

கவுகாத்தி: சிஎஸ்கே - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று இரவு கவுகாத்தி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கு முன்பாக கவுகாத்தி மைதானத்தில் பாலிவுட் நடிகை சாரா அலி கான் டான்ஸ் ஆடவிருக்கிறார். இதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக்கை ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

சென்னை - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கவுகாத்தி மைதானத்தில் நடக்கவுள்ளது. இதற்காக இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்த போட்டியிலும் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக ரியான் பராக் செயல்படவுள்ளார். முதல் 2 போட்டிகளில் ராஜஸ்தான் அணி தோல்வியை சந்தித்த நிலையில், இந்த போட்டியில் முதல் வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

CSK vs RR Fans Trolling Rajasthan Royals Captain Riyan Parag over Bollywoord Actress Sara Ali Khan to dance in the Opening Ceremony

இதனிடையே ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக்கை ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள். அதற்கு பாலிவுட் நடிகை சாரா அலி கானின் நடன நிகழ்ச்சி கவுகாத்தி மைதானத்தில் நடக்கவிருப்பதே காரணம். கடந்த ஐபிஎல் தொடருக்கு பின் ரியான் பராக் சோஷியல் மீடியாவில் மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கினார். அவர் தனது கணினியில் வீடியோ கேம் விளையாடி கொண்டிருந்தார்.

அப்போது யூட்யூப் சென்று பாடல்களை போடுவதற்காக தேடிய போது, அவர் அதற்கு முன்பாக சாரா அலி கான் ஹாட், அனன்யா பாண்டே ஹாட் என்று தேடி இருந்தது சர்ச்சையாகியது. இதுகுறித்து ரியான் பராக் மவுனம் காத்து வந்த போது, எனது யூட்யூப் தேடல் சர்ச்சை குறித்து எந்த விளக்கமும் அளிக்க வேண்டியவில்லை என்று கருதுவதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் கவுகாத்தி மைதானத்தில் ரசிகர்களுக்காக இன்று தொடக்க விழாவை நடத்த ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி பாலிவுட் நடிகை சாரா அலி கான் நடன நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார். பாலிவுட் உட்பட பல்வேறு மொழிகளின் பிரபல பாடல்களுக்கு நடனமாட இருக்கிறார். சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் இந்த நடன நிகழ்ச்சி ந்டக்கவுள்ளது.

ரியான் பராக் முன்னிலையில் சாரா அலி கான் டான்ஸ் ஆடவிருப்பது ரசிகர்களிடையே பேசுபொருளாகி இருக்கிறது. இந்த நடன நிகழ்ச்சியால் ரியான் பராக் மிகப்பெரிய உற்சாகத்தில் இருப்பார் என்றும், ரியான் பராக்கின் வளர்ச்சி அபரிமிதமாக இருப்பதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும் ரியான் பராக் சொந்த மண்ணில் கேப்டனாக களமிறங்கும் நிலையில், அந்த போட்டிக்கு முன் சாரா அலி கான் நடனமாடவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, March 30, 2025, 12:47 [IST]
Other articles published on Mar 30, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+