Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி மாபெரும் சிக்ஸர் சாதனை படைத்தார்.. இந்திய அளவில் ரோகித், கோலி வரிசையில் 4வது இடம்

டெல்லி: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி டி20 கிரிக்கெட் வரலாற்றில் 350 சிக்ஸர்கள் என்ற மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் இந்திய அளவில் டி20 போட்டிகளில் 350 சிக்ஸர்கள் அடித்த நான்காவது பேட்ஸ்மேன் என்ற சிறப்பையும் அவர் பெற்றார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் தோனி எட்டாம் வரிசையில் பேட்டிங் செய்தார். இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆயுஷ் மத்ரே 20 பந்துகளில் 43 ரன்கள் எடுத்திருந்தார். டெவால்டு பிரெவிஸ் 25 பந்துகளில் 42 ரன்கள் எடுத்திருந்தார்.

CSK vs RR MS Dhoni Achieves 350 T20 Sixes Milestone Fourth Indian to Do So

அடுத்து ஏழாம் வரிசையில் சிவம் துபேவும், எட்டாம் வரிசையில் தோனியும் இணைந்து பேட்டிங் செய்தனர். சிவம் துபே 32 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். தோனி மிகவும் நிதானமாக ஆடினார்; 17 பந்துகளில் 16 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவரது ஆட்டத்தில் ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே அடித்தார். அது அவரது 350-வது டி20 சிக்ஸர் ஆக அமைந்தது. இந்தப் போட்டியில் தோனி அதிரடியாக ஆடாவிட்டாலும், அவர் அடித்த ஒரு சிக்ஸரின் மூலம் டி20 போட்டிகளில் மைல்கல் சாதனையைப் படைத்தார்.

இதன் மூலம் சர்வதேச அளவில் 350 சிக்ஸர்களை அடித்த 34-வது வீரராக தோனி இருக்கிறார். இந்திய அளவில் இந்த மைல்கல்லை எட்டிய நான்காவது வீரர் ஆவார். ரோகித் சர்மா 542 சிக்ஸர்களை அடித்து இந்திய அளவில் டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர் அடித்த வீரராக இருக்கிறார். ரோகித் சர்வதேச அளவில் அதிக டி20 போட்டி சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஏழாவது இடத்தில் இருக்கிறார்.

அடுத்து விராட் கோலி 434 சிக்ஸர்களை அடித்து இரண்டாவது இடத்தில் இருக்கிறார். சூர்யகுமார் யாதவ் 368 சிக்ஸர்களை அடித்து மூன்றாவது இடத்தில் இருக்கிறார். தோனி தற்போது 350 சிக்ஸர்களுடன் நான்காவது இடத்தில் இருக்கிறார். அவரது சாதனை விரைவில் முறியடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில், சஞ்சு சாம்சன் தற்போது 348 சிக்ஸர்களுடன் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார். அவர் அடுத்து இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் விளையாடுவார். மேலும், உள்நாட்டு டி20 போட்டிகளிலும் ஐபிஎல் தொடரிலும் தொடர்ந்து விளையாடுவார் எனும் நிலையில், தோனியின் இந்த மைல்கல் சாதனையை அவர் விரைவில் முறியடிப்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்தப் பட்டியலில் கே.எல். ராகுல் 331 சிக்ஸர்களுடன் ஆறாவது இடத்தில் இருக்கிறார். அவரும் தோனியின் சாதனையை முறியடிக்க வாய்ப்பு உள்ளது.

சர்வதேச அளவில் கிறிஸ் கெயில் 1056 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். வேறு எந்த ஒரு பேட்ஸ்மேனும் ஆயிரம் சிக்ஸர்களை அடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, சுமார் 10 பேட்ஸ்மேன்கள் மட்டுமே 500 சிக்ஸர்கள் என்ற மைல்கல்லை எட்டி உள்ளனர். இந்திய அளவில் அந்த மைல்கல்லை எட்டிய ஒரே பேட்ஸ்மேன் ரோகித் சர்மா மட்டுமே.

Story first published: Tuesday, May 20, 2025, 22:20 [IST]
Other articles published on May 20, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+