Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரே ஓவரில் சிஎஸ்கே சோலியை முடித்து விட்டு ஆனந்தமாக கொண்டாடிய ஜடேஜா.. பழசை நினைத்து கதறிய ரசிகர்கள்!

கவுஹாத்தி: 2026 ஐபிஎல் தொடரின் 3-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. கவுகாத்தி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், சிஎஸ்கே அணி தனது முன்னாள் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் சுழலில் சிக்கிச் சின்னபின்னமானது. பல ஆண்டுகளாகச் சென்னை அணியின் முக்கிய ஆல்-ரவுண்டராக விளங்கிய ஜடேஜாவை இந்த முறை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மாற்றம் செய்தது சிஎஸ்கே நிர்வாகம். ஆனால், அது மிகப்பெரிய தவறு என்பதை இந்தப் போட்டி நிரூபித்துள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 2009-ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் ஜடேஜா களம் இறங்கியது ஒரு வரலாற்றுச் சாதனையாக அமைந்தது. கிட்டத்தட்ட 214 போட்டிகளுக்குப் பிறகு அவர் மீண்டும் ராஜஸ்தான் ஜெர்சியை அணிந்தார். பழைய பாசத்தைப் பார்க்காமல், களத்தில் இறங்கியது முதலே சென்னை பேட்ஸ்மேன்களுக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார் ஜடேஜா.

CSK vs RR Ravindra Jadeja finish CSK Former Star Takes Revenge with Double Strike for Rajasthan Royals

ஆட்டத்தின் 8-வது ஓவரை ஜடேஜா வீசத் தொடங்கினார். அந்த ஓவரின் 2-வது பந்திலேயே அதிரடியாக விளையாடி வந்த சர்பராஸ் கானை எல்பிடபிள்யூ முறையில் ஜடேஜா அவுட் செய்தார். சர்பராஸ் 17 ரன்களில் வெளியேற, சிஎஸ்கே 51 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. அடுத்ததாக வந்த சிவம் துபே, ஜடேஜாவின் 3-வது பந்தை 75 மீட்டர் தூரத்திற்கு மெகா சிக்ஸராக மாற்றினார். இதனால் ஜடேஜா சற்று நெருக்கடிக்கு உள்ளாவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தனது அனுபவத்தால் மீண்டு வந்த ஜடேஜா, அதே ஓவரின் கடைசி பந்தில் சிவம் துபேவை லாங்-ஆஃப் திசையில் ரவி பிஷ்னோயிடம் கேட்ச் கொடுக்க வைத்துப் பழி தீர்த்தார். ஒரே ஓவரில் 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தின் போக்கையே ஜடேஜா மாற்றினார்.

அதுமட்டுமின்றி அந்த விக்கெட்களை ஜடேஜா பெரிதாக கொண்டாடினார். அதைப் பார்த்த சிஎஸ்கே ரசிகர்கள் நல்ல அனுபவ வீரரை இழந்து விட்டோம் என தங்கள் வேதனையை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக 2023 ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்த ஜடேஜாவை சிஎஸ்கே விட்டுக் கொடுத்ததை விமர்சித்து வருகின்றனர்.

2026 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியிலேயே சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசை சீட்டுக்கட்டுப் போலச் சரிந்தது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 6 ரன்கள், விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் 6 ரன்கள் என அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 12.5 ஓவர் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 82 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. ஜடேஜா 3 ஓவர்களில் வெறும் 18 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

Story first published: Monday, March 30, 2026, 20:49 [IST]
Other articles published on Mar 30, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+