கவுகாத்தி: சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஸ்பின்னர்களை சிறப்பாக பயன்படுத்துவதில்லை என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது. கவுகாத்தி மைதானத்தில் ஸ்பின்னர்களுக்கு பிட்ச் சிறந்த ஒத்துழைப்பை கொடுக்கும் என்பதால், ருதுராஜ் கெய்க்வாட் கைகளிலேயே சிஎஸ்கே அணியின் வெற்றி அடங்கி இருப்பதாக பார்க்கப்படுகிறது. அதேபோல் பேட்டிங் ஆர்டரில் ருதுராஜ் கெய்க்வாட் மாற்றம் செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி விளையாட உள்ளது. கவுகாத்தி மைதானத்தில் நடக்கவுள்ள போட்டி என்பதால், சிஎஸ்கே ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த போட்டி ராஜஸ்தான் அணியின் சொந்த மண்ணில் நடந்தாலும், பிட்சின் தன்மை சிஎஸ்கே அணிக்கு சாதகமாக இருக்கிறது.

இந்த பிட்சில் முதல் இன்னிங்ஸ் சராசரி ஸ்கோராக 180 ரன்களும், 2வது பேட்டிங்கின் சராசரி ஸ்கோராக 165 ரன்களும் இருக்கின்றன. இதனால் முதல் பேட்டிங்கிற்கு பின் பிட்ச் ஸ்லோவாக மாறும் என்பது உறுதியாகிறது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ய வேண்டும். இந்த போட்டியில் வழக்கம் போல் 3 ஸ்பின்னர்களுடன் சிஎஸ்கே அணி களமிறங்க வேண்டும் என்று பார்க்கப்படுகிறது.
ஆனாலும் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கைகளிலேயே அந்த அணியின் வெற்றி இருக்கிறது. ஏனென்றால் கடந்த சீசனில் இருந்தே ருதுராஜ் கெய்க்வாட் சிஎஸ்கே ஸ்பின்னர்களின் திறமையை முழுமையாக பயன்படுத்துவதை தவிர்த்து வருகிறார். கடந்த போட்டியிலேயே 3 ஸ்பின்னர்களுக்கு சேர்த்து ருதுராஜ் மொத்தமாக 9 ஓவர்களை மட்டுமே வீச வைத்துள்ளார்.
கவுகாத்தி மைதானத்தில் 3 ஸ்பின்னர்களுக்கும் 12 ஓவர்களை வீச ருதுராஜ் கெய்க்வாட் திட்டமிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் சிஎஸ்கே அணி 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றதற்கு தொடக்க வீரர்கள் அதிக ரன்களை விளாசியதே முக்கியமான காரணமாகும். இதனால் கேப்டன் ருதுராஜ் மீண்டும் தொடக்க வீரராக களமிறங்கினால், சிஎஸ்கே வெற்றி உறுதியான ஒன்று.
அதுமட்டுமல்லாமல் ராகுல் திரிப்பாட்டிக்கு பவுன்சர் பந்துகளை எதிர்கொள்வதில் எப்போதும் சிரமம் இருந்து வந்துள்ளது. ராஜஸ்தான் அணியில் துஷார் தேஷ்பாண்டே, ஆர்ச்சர் போன்ற பவுலர்களின் முக்கிய ஆயுதமே ஷார்ட் பால் தான் என்பதால், ராகுல் திரிப்பாட்டி நம்பர் 3ல் களமிறங்க வேண்டும். ஒருவேளை திட்டத்தை மாற்றாமல் சிஎஸ்கே அணி களமிறங்கினால், மீண்டும் தோல்வியை சந்திக்க வாய்ப்புகள் உள்ளது.