Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கேவுக்காக ஆடிய முதல் போட்டியிலேயே சஞ்சு சாம்சன் செய்த செயல்.. ரசிகர்கள் அதிருப்தி

சென்னை: 2026 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் சிஎஸ்கே ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனமும் சஞ்சு சாம்சன் மீதுதான் இருந்தது. ராஜஸ்தான் அணியில் இருந்து ட்ரேடிங் முறையில் சென்னை அணிக்கு வந்த சஞ்சு சாம்சன், மஞ்சள் நிற ஜெர்சியில் களமிறங்கிய முதல் போட்டியிலேயே ரசிகர்களைப் பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளார்.

கவுகாத்தியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. சிஎஸ்கே அணியின் தொடக்க வீரராகக் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் உடன் சஞ்சு சாம்சன் களம் இறங்கினார். தோனி இல்லாத சூழலில், சஞ்சு சாம்சன் அதிரடி காட்டுவார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், ஆட்டத்தின் 2-வது ஓவரிலேயே அந்த எதிர்பார்ப்பு சுக்குநூறானது.

CSK vs RR Sanju Samson Fails in CSK Debut Against Rajasthan Royals Fans Disappointed by Quick Exit

ராஜஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நந்ரே பர்கர் வீசிய அந்த ஓவரின் கடைசி பந்தில் சஞ்சு சாம்சன் அவுட் ஆன விதம் சிஎஸ்கே கூடாரத்தையே நிலைகுலையச் செய்தது. 140.2 கி.மீ வேகத்தில் வந்த அந்தப் பந்து, குட் லென்த் பகுதியில் விழுந்து சற்றே வெளியே ஸ்விங் ஆனது. அதனைச் சரியாகக் கணிக்கத் தவறிய சஞ்சு சாம்சன், தேவையில்லாமல் குறுக்காக (Across the line) விளையாட முயன்று பந்தை முற்றிலும் தவறவிட்டார். பந்து நேரடியாக ஆஃப் ஸ்டம்பைத் தகர்த்தது. வெறும் 6 ரன்களில் சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்து வெளியேறினார். அவர் 7 பந்துகளை சந்தித்து 1 பவுண்டரி மட்டுமே அடித்து இருந்தார்.

சஞ்சு சாம்சன் அவுட் ஆனதும் மைதானமே நிசப்தமானது. வழக்கமாக ஐபிஎல் தொடரின் முதல் போட்டிகளில் சஞ்சு சாம்சன் அதிரடியாகச் சதம் அல்லது அரைசதம் விளாசி மிரட்டுவார். ஆனால், தனது முன்னாள் அணிக்கு எதிராக, அதுவும் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய முதல் போட்டியிலேயே அவர் கிளீன் போல்டு ஆகி வெளியேறியது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது. சமீபத்தில் டி20 உலகக்கோப்பையை இந்திய அணிக்கு வென்று கொடுத்து உலகக்கோப்பை தொடர் நாயகன் விருதை வென்ற சஞ்சு சாம்சன் முதல் போட்டியில் சொதப்பியது பெரும் ஏமாற்றமாக மாறியது.

இதுபற்றி சமூக வலைதளங்களில் சிஎஸ்கே ரசிகர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். "தோனிக்கு மாற்றாக விக்கெட் கீப்பராக வந்தவர் இப்படி ஆரம்பத்திலேயே விக்கெட்டைப் பறிகொடுக்கலாமா?" என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒருபுறம் தோனி காயம் காரணமாக அணியில் இல்லாதது கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், சஞ்சு சாம்சனின் இந்தச் சொதப்பல் ஆட்டம் சென்னை அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

Story first published: Monday, March 30, 2026, 20:32 [IST]
Other articles published on Mar 30, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+