சென்னை: சிஎஸ்கே அணியில் அடுத்தடுத்து இளம் வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்படுவதற்கு பின் இருக்கும் காரணம் குறித்து தெரிய வந்துள்ளது. 2018ஆம் ஆண்டுக்கு பின் சிஎஸ்கே அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படாமல் இருந்து வந்த நிலையில், தற்போது அடுத்தடுத்து இளம் வீரர்கள் அணிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி ஆடியுள்ள 8 போட்டிகளில் 2 வெற்றி, 6 தோல்வியுடன் புள்ளிப் பட்டியலில் 4 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. மும்பை அணிக்கு எதிராக அடைந்த தோல்வியால், இனி வரும் 6 போட்டிகளிலும் வென்றால் மட்டுமே சிஎஸ்கே அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும். இதனால் சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் சோகத்தில் இருக்கின்றனர்.

அதேபோல் தோனியும், சில நேரங்களில் தோல்வியின் போது எமோஷனலாக கூடாது. ஒருவேளை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியவில்லை என்றால், அடுத்த சீசனுக்கான அணியை கட்டமைக்க தயாராகி வருகிறோம் என்று தெரிவித்தார். இதனால் வழக்கம் போல் தோனி இனி வெல்ல வாய்ப்பில்லை, உடனடியாக அடுத்த சீசனுக்கு தயார் செய்து கம்பேக் கொடுக்க வேண்டும் என்ற முடிவில் இருப்பது தெரிய வந்துள்ளது.
அதேபோல் சிஎஸ்கே அணியில் இருக்கும் முக்கிய பிரச்சனை சீனியர் வீரர்களின் மோசமான ஆட்டம்தான். அதனை சரிகட்ட முடியாமல் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தடுமாறி வருகிறார். ஏனென்றால் ஒரே நேரத்தில் தோனி, ஜடேஜா, அஸ்வின் என்று 3 சீனியர்களை சமாளிக்க வேண்டும். தோனியை போல் அவ்வளவு எளிதாக அஸ்வினை பெஞ்ச் செய்யும் முடிவை ருதுராஜ் கெய்க்வாட் எடுக்க முடியாது.
அதனை அறிந்தே சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஃபிளமிங் மற்றும் கேப்டன் தோனி இருவரும் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார்கள். அதாவது ருதுராஜ் கெய்க்வாட் வயதிற்கு கீழ் உள்ள வீரர்கள் அடுத்தடுத்து சிஎஸ்கே அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு வருவதற்கு பின் ருதுராஜ் கெய்க்வாட்-ன் வயதும் முக்கிய காரணம்.
அன்சுல் கம்போஜ், பதிரானா, சிவம் துபே, கலீல் அஹ்மத், நூர் அஹம்த் ஆகியோரைத் தொடர்ந்து ஆயுஷ் மாத்ரே மற்றும் டிவால்ட் பிரெவிஸ் ஆகியோர் சிஎஸ்கே அணிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் சிஎஸ்கே அணியின் மிடில் ஆர்டரில் விளையாடும் பட்சத்தில் சிஎஸ்கே பலம் அதிகரிக்கும். அதேபோல் ருதுராஜ் கெய்க்வாட்-க்கும் அவர்களை எளிதாக கையாள முடியும்.
இதனால் அடுத்த சீசனுக்குள் சிஎஸ்கே அணியை தயார் செய்வதோடு, ருதுராஜ் கெய்க்வாட்-க்கு ஏற்றவாறு வீரர்களையும் கொண்டு வர சிஎஸ்கே அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதனால் சிஎஸ்கே அணிக்குள் நடக்கும் மாற்றங்கள் அனைத்தும் ருதுராஜ் கெய்க்வாட்-க்கு ஏற்றவாறு நடப்பதாக ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.