For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எங்களோட 4 பேட்ஸ்மேன்கள்.. அவர்களை பார்த்தால் எனக்கே பயமா இருக்கு.. பேட் கம்மின்ஸ் பெருமிதம்!

சென்னை: JioHotstar-ன் சிறப்பு தொடரான "Gen Gold"ல், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், தமது அணியின் ஆக்ரோஷமான கிரிக்கெட் அணுகுமுறை மற்றும் அணியில் உள்ள இளம் இளம் வீரர்கள் குறித்து பிரத்யேகமாக உரையாடி இருக்கிறார். பிளே ஆஃப் கனவு கிட்டத்தட்ட தகர்ந்துள்ள நிலையில், ஐதராபாத் அணியின் அடுத்தக் கட்ட திட்டங்கள் குறித்து பேசி இருக்கிறார்.

அதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் அட்டாக்கிங் பேட்டிங் அணுகுமுறை குறித்த கேள்விக்கு, எங்கள் அணியின் பெரும்பாலான வீரர்களும் அட்டாக்கிங் கிரிக்கெட்டை ஆடுகிறார்கள். இந்த சீசனின் முதல் போட்டியிலேயே நாங்கள் 280 ரன்களுக்கு மேல் எடுத்தபோது, அது அட்டாக்கிங் கிரிக்கெட் அல்ல என்றுதான் தோன்றியது. என்னை பொறுத்தவரை அது சூழலை அறிந்து, ஆடிய ஆட்டம் என்றே நினைக்கிறேன்.

CSK vs SRH Even i am feared to play against Head Nitish Reddy Klassen and Abhishek Sharma says SRH Captain Pat Cummins

பேட் கம்மின்ஸ் நேர்காணல்

அணியில் அட்டாக்கிங் பேட்டிங் வரிசை அமைந்துள்ளதால், எந்த ஷாட்டையும் விளையாட வேண்டாம் என்று கூறுவதில்லை. நம் வீரர்கள் 200 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாட ஆர்வமாக இருக்கின்றனர். அதனை நாங்கள் எப்போதும் ஊக்குவிக்கிறோம் என்று தெரிவித்தார். தொடர்ந்து, எப்போதும் அனைத்து பேட்ஸ்மேன்களும் ஸ்கோர் செய்யப் போவதில்லை.

எனக்கே பயமா இருக்கு

அதனால் ஐதராபாத் பேட்டிங் வரிசையில் ஒன்று அல்லது இரண்டு பேட்ஸ்மேன்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினாலே போதும். அந்த ஒரு இன்னிங்ஸே எங்களுக்கு வெற்றியைத் தரக்கூடியது. இதுபோன்ற ஒரு பேட்டிங் லைன் அப்பிற்கு எதிராக விளையாட வேண்டுமென்றால், எனக்கும் பயமாக தான் இருக்கும். ஏனென்றால் ஒரு பேட்ஸ்மேன் ஃபார்மில் இருந்தாலே 30 பந்துகளில் 100 ரன்களை அடிக்கலாம் என்று தெரிவித்தார்.

அனிகேத் வர்மா குறித்து கம்மின்ஸ்

இதன்பின் இளம் வீரரான அனிகேத் வர்மா குறித்த கேள்விக்கு, வார்ம்-அப் மற்றும் பயிற்சியின் அனிகேத் வர்மா எங்களை அதிகமாக ஈர்த்தார். ஆட்டத்தின் எந்த சூழலிலும் உடனடியாக சிக்ஸர் அடிக்க முயற்சிக்கிறார். அதனை அவர் தொடர்ந்து செய்து வருகிறார். ஸ்பின்னர்களை எதிர்த்து தைரியமாகவும், சுதந்திரமாகவும் ஆடுவது சிறப்பாக உள்ளது. அவர் அடிக்கும் ஷாட்டுகள் அழகாக உள்ளன என்று கூறினார்.

இளம் வீரர்களுடன் பணியாற்றும் அனுபவம்

தொடர்ந்து இளம் வீரர்கள் உடன் பணிபுரிவது குறித்த கேள்விக்கு, முதலில் நான் அவர்களை புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன். அவர்கள் சிறந்த சூழலில் இருக்கும் போது, எப்படி இருப்பார்கள் என்பதைப் பார்க்கிறேன். அனிகேத் வர்மா மற்றும் இஷான் கிஷன் இருவருமே அட்டாக்கிங் ஸ்டைலில் விளையாடுபவர்கள். போட்டியை மொத்தமாக கட்டுப்படுத்த விரும்புவார்கள். அதேபோல் எப்போது ரன்கள் கிடைக்காது என்பதை உணர்ந்து செயல்படுகிறோம் என்று தெரிவித்தார்.

பவுலிங் யூனிட்

பின்னர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பவுலிங் யூனிட் குறித்து பேசுகையில், கடந்த ஆண்டு எல்லோரும் பேட்டிங்கைப் பற்றித்தான் பேசினார்கள். ஆனால் ஐதராபாத் பவுலிங் அதிக அனுபவம் கொண்டதது. கேப்டனாக எனக்கு அது ரொம்ப முக்கியமான விஷயம். அப்போது, நடராஜன், புவனேஷ்வர் குமார், ஜெய்தேவ் உனாட்கட் போன்ற வீரர்கள் இருந்தார்கள்.

அனுபவமே பலம்

இந்த ஆண்டும் அதே மாதிரி அனுபவம் நிறைந்த வீரர்கள் இருக்கிறார்கள். ஹர்ஷல் படேல், முகமது ஷமி, ஜெய்தேவ் உனாட்கட், ஆடம் ஸாம்பா என்று பலரும் வந்துள்ளார்கள். பேட்டிங் யூனிட் சொதப்பும் நேரத்தில் அமைதியாக இருப்பது மிகவும் முக்கியம். அந்த நம்பிக்கையை சீசன்ல முழுக்க வைத்து வரவேண்டி வரும். அதுவே அனுபவம் தரும் பலம் என்று தெரிவித்தார்.

பேட்ஸ்மேன்களின் தரம்

தொடர்ந்து டி20 ஸ்கோரிங் ட்ரெண்டை 300 ரன்கள் வரை உயர்த்தியதில் ஐதராபாத் அணியின் பங்கு இருப்பது குறித்த கேள்விக்கு, இந்த புகழ் பேட்டிங் யூனிட்டிற்கே சேரும். டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, கிளாசன் ஆகிய வீரர்கள் சிறந்தவர்கள். அவர்கள் T20 பேட்டிங்கின் தரத்தை அடுத்தக் கட்டத்திற்கு உயர்த்தினார்கள்.

மிகச்சிறந்த பேட்டிங் யூனிட்

பிட்ச் நன்றாக இருக்கிறது. அதேபோல் கூடுதலாக இம்பாக்ட் பிளேயர் வாய்ப்பும் இருக்கிறது. அதனால் 10 ரன் ரேட் இருந்தாலும் எளிதாக சேஸ் செய்துவிடுவார்கள். இதனால் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி மற்றும் என் பணிகள் அவர்களை ஊக்குவிப்பது மட்டும்தான். எங்கள் வீரர்களின் பேட்டிங் அளவுக்கே மீறி சிறப்பாக இருக்கிறது என்று தெரிவித்தார்.

ஐதராபாத் vs சிஎஸ்கே

இன்று மாலை 7:30 மணிக்கு, TATA IPL ரிவெஞ்ச் வீக்கின் பிரமாண்டமான மோதலில், சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் விளையாடுகிறது. இதனை நேரடியாக மற்றும் சிறப்பாக பார்க்க JioHotstar செயலியிலும் Star Sports வலைத்தளங்களிலும் பார்க்கலாம். TATA IPL சூப்பர் நட்சத்திரங்களை நேரில் சந்திக்க, Star Sports 1 (SD & HD) மற்றும் JioHotstar செயலியில் தொடர்ந்து இருங்கள்.

Story first published: Friday, April 25, 2025, 17:07 [IST]
Other articles published on Apr 25, 2025
English summary
CSK vs SRH: Even i am feared to play against Head, Nitish Reddy, Klassen and Abhishek Sharma says SRH Captain Pat Cummins
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+