மும்பை: ஐபிஎல் 2026 சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்,பார்முக்கு திரும்புவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். நடப்பு சீசனில் ரன் குவிக்கத் திணறி வரும் கெய்க்வாடிற்கு, SRH அணிக்கு எதிராகச் சிறப்பான ரெக்கார்டு உள்ளது.
இந்த சீசனில் 5 இன்னிங்ஸ்களில் 13-க்கும் குறைவான சராசரியிலும், 105 ஸ்ட்ரைக் ரேட்டிலும் பேட்டிங் செய்த கெய்க்வாட், ஓபனிங் இறங்கியும் ஒருமுறை கூட 30 ரன்களைக் கடக்கவில்லை. எனினும், SRH அணிக்கு எதிராக தனது ஐபிஎல் கேரியரில் 7 இன்னிங்ஸ்களில், 56-க்கும் அதிகமான சராசரியுடன் 153.30 ஸ்ட்ரைக் ரேட்டில் சுமார் 400 ரன்கள் அடித்துள்ளார். இதில் மூன்று அரைசதங்கள், குறிப்பாக 2024-ல் 54 பந்துகளில் அடித்த 98 ரன்களும் அடங்கும்.

SRH போட்டிக்கு முன் தனது யூடியூப் சேனலில் பேசிய பத்ரிநாத், "அவர் நம்பர் 3-ல் பேட் செய்வது போல் தெரியவில்லை. அவரது பார்ம் கவலை அளிக்கிறது. அவரது கேப்டன்சி சிறப்பாக உள்ளது; ஆனால் பேட்டிங் இன்னும் எடுபடவில்லை. ஆனாலும், பார்முக்குத் திரும்ப இதுவே சரியான போட்டி என உணர்கிறேன். SRH கெய்க்வாட்க்கு பிடித்த அணி." என்றார்.

"SRH-க்கு எதிராக 56 சராசரி, 153 ஸ்ட்ரைக் ரேட்டில் கிட்டத்தட்ட 400 ரன்கள் எடுத்திருக்கிறார். இதனால், கெய்க்வாட் இந்தப் போட்டியில் பெரிய ரன் குவிப்பார் என நம்புகிறேன். எதிரணியைத் தவிர, ஹைதராபாத் களநிலையும் பேட்டிங்கிற்கு ஏற்றது. அவரோ அல்லது சஞ்சுவோ நீண்ட நேரம் களத்தில் ஆடினால் CSK சிறந்த அணியாகத் தெரியும்." என்றார்.
கேப்டன் கெய்க்வாடின் மிகப்பெரிய சவால், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் இடது கை டாப்-3 பேட்ஸ்மேன்களான அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட் மற்றும் இஷான் கிஷனுக்கு எதிராக அக்யால் ஹொசைன், நூர் அஹமது ஆகிய இரு இடது கை சுழற்பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்துவதுதான் என பத்ரிநாத் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு வெற்றிகளிலும் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.
"அந்த மூன்று பேரும் இடது கை அச்சுறுத்தும் பேட்ஸ்மேன்கள். பவர்பிளேயில் அக்யால் ஹொசைனைப் பயன்படுத்தும் கெய்க்வாடிற்கு இது சவாலாக இருக்கும். நூர் அஹமதுவும் கடந்த ஆட்டத்தில் சிறப்பாகப் பந்துவீசினார். ஆனால், இரு இடது கை சுழற்பந்து வீச்சாளர்களையும் பவர்பிளேயில் பயன்படுத்த முடியாது. இதுவே கெய்க்வாடின் மிகப்பெரிய சவால்" என்றார் பத்ரிநாத்.

"இடது கை சுழற்பந்து வீச்சாளர்களும் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு பந்துவீசலாம் என்று கெய்க்வாட் நினைக்கலாம். குறிப்பாக அக்யால் ஹொசைனுக்கு இடது கை பேட்ஸ்மேன்களை விட்டு விலகிச் செல்லும் பந்து இருப்பதால், ஒரு ஓவர் கொடுத்து எப்படி வேலை செய்கிறது என்று பார்க்கலாம். இடது கை சுழற்பந்து வீச்சாளர் இடது கை பேட்ஸ்மேனுக்கு பந்துவீசக் கூடாது என்று எந்த விதியும் இல்லை." என்று கூறினார். சிஎஸ்கே, நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் மூன்று போட்டிகளில் சறுக்கலைச் சந்தித்து, தற்போது அடுத்தடுத்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.