For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எல்லாம் தயாரான சூழலில் வந்த திடீர் பிரச்னை; சிஎஸ்கே - ஆர்சிபி போட்டி.. முழுவதும் நடப்பதில் சிக்கல்

ஷார்ஜா: பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.

சென்னை - பெங்களூரு ஆட்டம் நடைபெறவிருந்த சூழலில், ஷார்ஜாவில் மணல் புயல் வீசியதால், டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.

பிறகு, நிலைமை சற்று சரியானதால், 7:30 மணிக்கு டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற கேப்டன் தோனி பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.

csk won the toss and elect to field first against rcb ipl 2021

இந்த ஐபிஎல் 2021 தொடரில் இரண்டாம் பகுதியில், முதல் போட்டியில் மும்பை அணியை எதிர்கொண்ட தோனி ஆர்மி, 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம், 8 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில், இன்று தனது 2வது போட்டியில் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. சென்னை அணியைப் பொறுத்தவரை தற்போது 12 புள்ளிகள் பெற்றிருப்பதால், இன்னும் 2 போட்டிகளில் வென்று 16 புள்ளிகள் பெற்றுவிட்டால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிடலாம்.

எனவே, எந்தவித சிக்கலும் இன்றி, பிளே ஆஃப் முன்னேற, இந்த போட்டியை பயன்படுத்திக் கொள்ள சிஎஸ்கே முயற்சிக்கும். அதேசமயம், 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்வியுடன் 10 புள்ளிகளுடன் பெங்களூரு மூன்றாம் இடத்தில் உள்ளது. ஸோ, பிளே ஆஃப் ரேஸில் நீடிக்க இந்த போட்டி பெங்களூருவுக்கு சற்று முக்கியத்துவம் வாய்ந்ததே. குறிப்பாக, கொல்கத்தாவுக்கு எதிரான முதல் போட்டியில் வெறும் 92 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, படுதோல்வி அடைந்த நிலையில், இன்று பலம் வாய்ந்த சென்னை அணியை எதிர்கொள்கிறது.

csk won the toss and elect to field first against rcb ipl 2021

இந்நிலையில், ஷார்ஜாவில் பாலைவனப் புயல் வீசியதால், டாஸ் போடுவதில் சற்று தாமதம் ஏற்பட்டது. இதன் பிறகு நிலைமை சரியாகி டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் தோனி பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். அணியில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஃபாஃப் டு பிளசிஸ், ருதுராஜ் கெய்க்வாட், மொயீன் அலி, சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, தோனி (c & wk), டுவைன் பிராவோ, ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், ஜோஷ் ஹேசில்வுட் ஆகிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இப்போட்டியில், சாம் கர்ரன் அணியில் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தோனி எந்தவித மாற்றத்தையும் மேற்கொள்ளவில்லை. பொதுவாக வெற்றிப் பெற்ற அணியின் பிளேயிங் லெவனை மாற்றுவதில் ஆர்வம் காட்டாத தோனி, இப்போது மீண்டும் அதே ஃபார்முலாவை கையில் எடுத்துள்ளார். அதேசமயம், முதல் போட்டியில் பிராவோ பேட்டிங், பவுலிங் என ஒரு பக்கா ஆல் ரவுண்டராக ஜொலித்தார். இதனால், தனது குவாரண்டைனை முடித்து ரெடியாக இருந்த சாம் கர்ரனுக்கு இப்போட்டியில் தோனி வாய்ப்பு தரவில்லை. கடந்த இரு சீசனில் பிராவோ எந்தவித தாக்கமும் ஏற்படுத்தாத நிலையில், மும்பைக்கு எதிரான முதல் போட்டியில் அவர் ஆடிய ருத்ரதாண்டவம், தோனியை இந்த முடிவை எடுக்க வைத்துள்ளது. அதேசமயம், பெங்களூரு அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில், சிங்கப்பூர் வீரர் டிம் டேவிட் மற்றும், நவ்தீப் சைனி ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

Story first published: Friday, September 24, 2021, 20:08 [IST]
Other articles published on Sep 24, 2021
English summary
csk won the toss and elect to field first ipl 2021 - சிஎஸ்கே
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+