Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK அணியின் ரூ.8.4 கோடி வீரர் அதிரடி ஆட்டம்.. 6 இமாலய சிக்சர், 8 பவுண்டரி விளாசல்.. 20 வயதில் அபாரம்

லக்னோ : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் ஒவ்வொரு அணியும் பல மாற்றங்களை சந்திக்க இருக்கிறது. இந்த நிலையில் சிஎஸ்கே அணி தற்போது இளம் வீரர்களை அதிக அளவு பயன்படுத்த முயற்சி செய்து வருகிறது. சிஎஸ்கே அணி கடந்த மினி ஏலத்தின் உத்தர பிரதேசத்தை சேர்ந்த 20 வயதான சமீர் ரிஸ்வி என்ற வீரரை 8 கோடியே 40 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறார்கள்.

சமீர் ரிஸ்வியை வலது கை குட்டி ரெய்னா என்று உள்ளூர் ரசிகர்கள் அழைப்பார்களாம். அந்த அளவுக்கு சமீர் ரிஸ்வி அதிரடியாக விளையாடுவார் என்று பெயர் பெற்றிருக்கிறார். இதன் காரணமாகத்தான் சிஎஸ்கே அவரை அதிக பணம் கொடுத்து வாங்கியது. எனினும் சமீர் ரிஸ்விக்கு பெரிய அளவில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை.

sameer rizvi csk UP T20 League

கடந்த 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் அவர் மொத்தமாகவே 43 பந்துகளை தான் எதிர் கொண்டு 51 ரன்கள் சேர்த்தார். இதில் அதிகபட்சமாக அவர் அடித்தது 21 ரன்கள் ஆகும். இந்த நிலையில் சமீர் ரிஸ்வி, உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் டி20 தொடரில் கான்பூர் அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார்.

நேற்று நடைபெற்ற லக்னோ அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கான்பூர் அணி 16 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது களத்துக்கு வந்த சமீர் ரிஷ்மி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சமீர் ரிஸ்வி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகள் இழந்தது.

இதனால் கான்பூர் அணி ஆறு விக்கெட்டுகளை இழந்து 50 ரன்கள் எடுத்தது. இதனை எடுத்து சமீர் ரிஸ்வி கொஞ்சம் கூட பதற்றம் அடையாமல் தன்னுடைய வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.தம்மை சுற்றி விக்கெட்டுகள் விழுந்தாலும் பவுண்டரி, சிக்சர் என அடித்து விளையாடியிருக்கிறார். அதாவது எந்த பந்தை விட வேண்டும்? எந்த பந்தை அடிக்க வேண்டும் என்பதை நன்கு புரிந்து கொண்ட சமீர் ரிஸ்வி 8 பவுண்டரிகள் 6 இமாலய சிக்சர்களை அடித்திருக்கிறார்.

இதன் மூலம் 59 பந்துகளை எதிர் கொண்ட சமீர் ரிஸ்வி 89 ரன்கள் குவித்து 19 ஆவது ஓவரில் ஆட்டம் இழருந்திருக்கிறார். சமீர் ரிஸ்வி அபார ஆட்டத்தால் கான்பூர் அணி 156 ரன்கள் எடுத்தது. இதன் அடுத்து களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

நடு வரிசையில் தோனியை போல் களம் இறங்கி விக்கெட்டுகள் சரிந்தாலும் தனி ஆளாக நின்று சமீர் ரிஸ்வி அணியை காப்பாற்றி இருக்கிறார். இதனால் சமீர் ரிஸ்வியை தக்க வைக்க வேண்டும் என சிஎஸ்கே ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Story first published: Tuesday, August 27, 2024, 11:03 [IST]
Other articles published on Aug 27, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+