மீண்டும் மீண்டுமா.. 3 மாதங்கள் ஓய்வுக்கு செல்லும் ஆயுஷ் மாத்ரே.. சிஎஸ்கே வீரருக்கு ஏற்பட்ட காயம்!
சென்னை: சிஎஸ்கே அணியின் நட்சத்திர இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே காயம் காரணமாக 3 மாதங்கள் ஓய்வில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார். ஏற்கனவே ஐபிஎல் தொடரின் போது ஆயுஷ் மாத்ரே காயம் அடைந்த போது சுமார் 3 மாதங்களாக களத்திற்கே வரவில்லை. தற்போது களத்திற்கு வந்த ஒரே மாதத்தில் மீண்டும் காயம் அடைந்திருப்பது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிஎஸ்கே அணியின் இளம் நட்சத்திர வீரர் ஆயுஷ் மாத்ரே. 17 வயதில் சிஎஸ்கே அணிக்காக அறிமுகம் செய்யப்பட்டதே ரசிகர்களiிடையே மிகப்பெரிய பாராட்டுக்களை பெற்றார். அதிலும் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் ஆயுஷ் மாத்ரே சதம் அருகில் சென்று விக்கெட்டானது வியப்பை ஏற்படுத்தியது. இதனால் ஆயுஷ் மாத்ரே தான் சிஎஸ்கே அணியின் எதிர்காலம் என்று பார்க்கப்பட்டது.

அதற்கேற்ப இந்திய யு19 கேப்டனாக ஆயுஷ் மாத்ரே உலகக்கோப்பையை வென்று புதிய வரலாறு படைத்தார். இதனால் ருதுராஜ் கெய்க்வாட்க்கு பின் சிஎஸ்கே அணியின் கேப்டனாக நிச்சயம் ஆயுஷ் மாத்ரே உயர்வார் என்று ரசிகர்கள் கொண்டாடினர். ஆனால் ஆயுஷ் மாத்ரே கடந்த சீசனின் போது காலில் காயம் அடைந்து ஓய்வுக்கு சென்றார்.
இதன்பின் சுமார் 3 மாதங்களாக ஓய்வில் இருந்த ஆயுஷ் மாத்ரே, பின்னர் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று சிகிச்சை பெற்று பயிற்சிக்கு திரும்பினார். தொடர்ந்து ரஞ்சி டிராபி தொடருக்கான மும்பை அணியில் ஆயுஷ் மாத்ரே தேர்வு செய்யப்பட்டார். முதல் போட்டியில் மும்பை அணி, சண்டிகர் அணியை எதிர்த்து களமிறங்கியது.
இந்தப் போட்டியில் ஆயுஷ் மாத்ரே விளையாடுகையில் ரன்கள் எடுக்க ஓடிய போது, திடீரென காயம் ஏற்பட்டது. இதன்பின் ஓய்வறைக்கு திரும்பிய ஆயுஷ் மாத்ரே, மருத்துவமனையில் ஸ்கேன் செய்தார். அதில் ஆயுஷ் மாத்ரேவுக்கு கிரேடு 4 ஹாம்ஸ்ட்ரிங் காயம் ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதனால் ஆயுஷ் மாத்ரே 3 மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆயுஷ் மாத்ரே அடுத்ததாக ஜனவரி இறுதி அல்லது பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் தான் கிரிக்கெட் களம் திரும்புவார் என்று தெரிகிறது. இதன் மூலமாக ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக நேரடியாக ஆயுஷ் மாத்ரே களமிறங்குவார் என்று பார்க்கப்படுகிறது. இருப்பினும் சிஎஸ்கே ரசிகர்கள் ஆயுஷ் மாத்ரேவின் தொடர் காயத்தால் சோகம் அடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications
