சாம்பியன்ஸ் டிராபி.. இலங்கை-தென் ஆப்பிரிக்கா நாளை மோதல்! வெற்றி வாய்ப்பு யாருக்கு?
லண்டன்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் இலங்கையை தென் ஆப்பிரிக்கா எதிர்கொள்கிறது.
கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற இரு நாடுகள் நடுவேயான கிரிக்கெட் தொடரில் 5-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது தென் ஆப்பிரிக்கா. அதே வேகத்தோடு நாளை இலங்கையை அது எதிர்கொள்ளும். முன்நதாக, ஆஸி. அணியையும் 5-0 என்ற கணக்கில் தோற்கடித்திருந்தது தென் ஆப்பிரிக்கா.
ஒரு நாள் சர்வதேச தரவரிசையில் முதலிடம் வகிக்கித்த போதிலும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) போட்டிகளில் சிறப்பாக செயல்படாத ராசி இல்லாத அணி என்ற பெயர் தென் ஆப்பிரிக்காவுக்கு உண்டு.

டிவில்லியர்ஸ் பலம்
சாம்பியன்ஸ் டிராபியை 1998 ஆம் ஆண்டு வென்றது தென் ஆப்பிரிக்கா. அதுதான் இந்த அணியின் ஒரே ஐசிசி அளவிலான ஆறுதல் வெற்றி. உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஏபி டி வில்லியர்ஸ் மற்றும் ரபாடா ஆகியோர் தென் ஆப்பிரிக்க அணியில் உள்ளது அதற்கு பலம்.

மினி உலக கோப்பை
மினி உலகக் கோப்பையில் கலந்துகொள்ளும் நிலையில் நாங்கள் இன்னும் நம்பர் 1 இடத்தில்தான் உள்ளோம் என்பதால், நம்பிக்கையுடன் உள்ளோம் என்கிறார் தென் ஆப்பிரிக்க கேப்டன் டிவில்லியர்ஸ்.

மலிங்கா ரிட்டர்ன்
இலங்கை இந்த தொடரில் கணிக்க முடியாத அணியாக உள்ளது. லசித் மலிங்கா இல்லாமல் தவித்த அந்த அணி, தற்போது அவரின் காயம் தீர்ந்த வருகையால் மகிழ்ச்சியில் உள்ளது. மலிங்கா இல்லாமல் தவித்திருந்தோம், இப்போது அவர் ஆர்வத்தோடு களமிறங்க வந்துள்ளார் என்கிறார் இலங்கை கேப்டன் மேத்யூஸ்.

சுழற்பந்து
தென் ஆப்பிரிக்கா சுழற் பந்தில் திணறும் என்பதால் இடது கை ஸ்பின்னர் ரக்ஷன் சன்டகனை பெரிதும் நம்பியுள்ளது இலங்கை அணி. அவர் வெகு சில போட்டிகளே ஆடியுள்ளதால் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் இவரை கணிப்பதில் தவறு இழைப்பார்கள் என நம்புகிறது இலங்கை அணி.

தென் ஆப்பிரிக்க அணி விவரம்
டிவில்லியர்ஸ்-கேப்டன், ஹசிம் ஆம்லா, குயின்டன் டி காக்- விக்கெட் கீப்பர், பாப் டுப்ளசிஸ், ஜேபி டுமினி, டேவிட் மில்லர், கிறிஸ் மோரிஸ், வேய்ன் பர்னல், அன்டிலே பெக்லுக்வயோ, ககிசோ ரபடா, இம்ரான் தாகிர், ட்வைன் ப்ரெடோரியஸ், ககேசவ் மகராஜ், பர்ஹான் பெகார்டியன், மோர்னே மோர்கல்.

இலங்கை அணி விவரம்
ஏஞ்சலே மேத்யூஸ்-கேப்டன், உபுல் தரங்கா, நிரோசன் டிக்வெல்லா-விக்கெட் கீப்பர், குசால் பெரேரா, குசால் மென்டிஸ், சமரா கப்புகெதெரா, அசீலா குனரத்னே, தினேஷ் சண்டிமால்-விக்கெட் கீப்பர், லசித் மலிங்கா, சுரங்கா லக்மல், நுவான் பிரதீப், நுவான் குலசேகரா, திசாரா பெரேரா, லக்ஷன் சண்டகன் மற்றும் சீக்குகே பிரசன்னா.


Click it and Unblock the Notifications