Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாம்பியன்ஸ் டிராபி: பரம வைரிகளான இந்தியா-பாகிஸ்தான் நாளை மோதல்! 10 சுவாரசியங்கள்

மும்பை: இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் வெகு காலத்திற்கு பிறகு நாளை நேருக்கு நேர் சந்திக்க உள்ளன. இவ்விரு அணிகளும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பி பிரிவில் இடம் பெற்றுள்ளன.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு அணிகளுக்குமே நாளைதான் இத்தொடரின் முதல் போட்டியாகும். இரு அணிகளுமே வெற்றியோடு போட்டித்தொடரை ஆரம்பிக்க வேண்டும் என்ற வேட்கையில் உள்ளன.

இந்த நிலையில், இவ்விரு அணிகள் நடுவேயான சுவாரசியமான 10 தகவல்களை நீங்கள் பார்க்கலாம்:

3வது முறை

3வது முறை

சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் இதுவரை இந்தியா-பாகிஸ்தான் நேருக்கு நேர் மோதிக்கொள்ள 3 முறை வாய்ப்பு கிடைத்திருந்தது. இது இரு நாட்டு ரசிகர்களுக்கும் பெரும் உற்சாகத்தை கொடுத்தது.

பாகிஸ்தான் வெற்றிகள்

பாகிஸ்தான் வெற்றிகள்

இரு நாடுகளும் மோதிக்கொண்ட போட்டிகளில் பாகிஸ்தான் 2 முறை வென்றுள்ளது. இந்தியா ஒருமுறை வெற்றி பெற்றுள்ளது. அதேநேரம், உலக கோப்பைகளில் இந்தியாதான் அனைத்து போட்டிகளிலும் வென்றுள்ளது.

சோயிப் மாலிக்

சோயிப் மாலிக்

இதற்கு முந்தைய 3 மோதல்களிலும் பாகிஸ்தான் அணியில் இருந்த ஒரே வீரர் சோயிப் மாலிக். இம்முறையும் அவர் ஆடுகிறார். இவரு யாருன்னு தெரிம்ல. சானியா கணவர்தான்.

6வது முறை ஆடும் மாலிக்

6வது முறை ஆடும் மாலிக்

சோயிப் மாலிக் மொத்தம் 6 சாம்பியன் டிராபிகளில் ஆடி சாதனை படைக்க உள்ளார். முன்னதாக 2002, 2004, 2006, 2009 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளில் சோயிப் மாலிக் பங்கேற்றுள்ளார்.

சதம் அடித்த தனி ஒருவர்

சதம் அடித்த தனி ஒருவர்

இந்தியா-பாகிஸ்தான் நடுவேயான சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் சதம் அடித்த ஒரே பாகிஸ்தான் வீரர் மாலிக்தான். 2009ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் 126 பந்துகளில் 128 ரன்கள் அடித்தார். அந்த போட்டியில் 54 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

களம் ரெடி

களம் ரெடி

இங்கிலாந்தின் எட்ஜ்பாஸ்டன் நகரில்தான் நாளை இரு அணிகளும் பலப் பரிட்சை நடத்த உள்ளன. சாம்பியன்ஸ் டிராபியில் முன்னதாக 2004 மற்றும் 20013ம் ஆண்டுகளில் இதே இடத்தில் இவ்விரு அணிகளும் மோதியுள்ளன.

நெஹ்ரா ராக்ஸ்

நெஹ்ரா ராக்ஸ்

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இவ்விரு நாடுகளும் மோதியபோது, இரு நாட்டை சேர்ந்த எந்த ஒரு பவுலரும் ஒரே போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியதில்லை. 2009ல் ஆஷிஷ் நெஹ்ரா பாகிஸ்தானுக்கு எதிராக 55 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழத்தியது இந்திய தரப்பின் பெஸ்ட். அதேபோல பாகிஸ்தான் தரப்பில் 2004ம் ஆண்டு போட்டியின்போது நவீத் உல் ஹசன் 25 ரன்களுக்கு 4 விக்கெட்டையும், சோயிப் அக்தர் 36 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் வீழத்தினர்.

இவர்களுக்கு இது புதுசு

இவர்களுக்கு இது புதுசு

ஐசிசி அளவிலான போட்டித்தொடர் ஒன்றில் கேப்டனாக விராட் கோஹ்லி களமிறங்குவது இதுதான் முதல் முறையாகும். பாகிஸ்தான் கேப்டனன் சர்ப்ராஸ் அகமதுவுக்கும் அதே நிலைதான். ஆனால் இவ்விருவருமே 19 வயதுக்கு உட்பட்டோர் உலக கோப்பை கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக செயல்பட்டுள்ளனர்.

களம் கண்டவர்கள்

களம் கண்டவர்கள்

விராட் கோஹ்லி, ரோகித்ஷர்மா, ஷிகர்தவான், தினேஷ் கார்த்திக், மகேந்திர சிங் டோணி, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், புவனேஸ்வர்குமார், உமேஷ் யாதவ் ஆகிய 9 இந்திய வீரர்களும், சோயிப் மாலிக், முகமது ஹபீஸ், ஜுனைட் கான் ஆகிய 3 பாகிஸ்தான் வீரர்களும் கடந்த சாம்பியன் டிராபியிலும் ஆடி அனுபவம் உள்ளவர்கள்.

டிக்கெட் சோல்ட்அவுட்

டிக்கெட் சோல்ட்அவுட்

இந்தியா-பாகிஸ்தான் போட்டியால் சாம்பியன் டிராபி தொடரை உயிர்ப்பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டன என ஐசிசி அறிவித்துள்ளது.

Story first published: Saturday, June 3, 2017, 11:18 [IST]
Other articles published on Jun 3, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+