Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாம்பியன்ஸ் டிராபியில் சிறந்த போட்டி இதுதான்.. கோஹ்லி குஷி!

லண்டன்: நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறந்த ஆட்டம் இதுதான் என்று இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி தெரிவித்தார்.

தென் ஆப்பிரிக்காவை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது குறித்து டிவி வர்ணனையாளரிடம் கோஹ்லி பேசினார்.

அவர் கூறியதாவது: இந்திய அணியின் பந்து வீச்சும், ஃபீல்டிங்கும் சிறப்பாக இருந்தது.

இணைந்து ஆடினோம்

இணைந்து ஆடினோம்

டிவில்லியர்சை விரைவில் அவுட் செய்தது சிறப்பானது. அவர் கூடுதல் நேரம் களத்தில் நின்றால் போட்டியை மாற்றியிருப்பார். இந்திய அணி ஒட்டுமொத்தமாக இணைந்து, சிறப்பாக ஆடியது.

தன்னம்பிக்கை

தன்னம்பிக்கை

இனிமேல் தன்னம்பிக்கையோடு அரையிறுதி செல்ல முடியும். யுவராஜ்சிங் சிக்சரோடு போட்டியை முடித்து வைத்தது அணிக்கு கூடுதல் நம்பிக்கையளிக்கிறது. நடப்பு சாம்பியன்ஸ் டிராபியில் இதுவரை ஆடியதில் இதுதான் சிறந்த போட்டி என்று கூற முடியும்.

கோஹ்லி சிறப்பு

கோஹ்லி சிறப்பு

இன்னும் இரு போட்டிகளில் வென்றால் கோப்பை இந்தியாவிடமே திரும்ப வரும். இவ்வாறு கோஹ்லி தெரிவித்தார். கோஹ்லி 76 ரன்கள் விளாசி நாட்-அவுட்டாக கடைசி வரை களத்தில் நின்றது குறிப்பிடத்தக்கது.

டிவில்லியர்ஸ்

டிவில்லியர்ஸ்

தென் ஆப்பிரிக்க கேப்டன் டிவில்லியர்ஸ் கூறுகையில், இந்த தோல்வி ஏமாற்றமளிக்கிறது. இப்படி ஒரு தோல்வியோடு தொடரை விட்டு வெளியேறுவது வருத்தமளிக்கிறது.

இந்தியாவிடம் முடியாது

இந்தியாவிடம் முடியாது

எளிதாக விக்கெட்டுகளை இழந்தது தவறு. இதுவும் இந்தியா போன்ற சிறந்த அணிக்கு எதிராக இவ்வாறு எளிதாக விக்கெட்டுகளை இழந்ததால் அதன் தாக்கம் அதிகமாக இருந்தது என்றார். டிவில்லியர்ஸ் உட்பட 3 தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் ரன்அவுட்டாகி வெளியேறியதை இவ்வாறு குறிப்பிட்டார் அவர்.

Story first published: Sunday, June 11, 2017, 21:55 [IST]
Other articles published on Jun 11, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+