Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இனி சும்மா சும்மா வைடு கொடுக்க முடியாது.. கிரிக்கெட்டில் வரும் விதி மாற்றம்.. ஐசிசி நடவடிக்கை

துபாய்: வேகப் பந்துவீச்சு ஜாம்பவானான ஷான் பொல்லாக் விரைவில் கிரிக்கெட்டில் வைடு பாலுக்கான விதியில் மிகப்பெரிய மாற்றம் வர இருப்பதாக சுட்டிக்காட்டி இருக்கிறார். தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளரான ஷான் பொல்லாக் பவுலிங் ஜாம்பவான் ஆவார். அவர் தென்னாப்பிரிக்கா அணிக்காக 829 சர்வதேச விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார்.

21 முறை ஐந்து விக்கெட் ஹால் மற்றும் ஒரு முறை 10 விக்கெட் ஹால் சாதனையை செய்து இருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் 421 விக்கெட்களையும், ஒருநாள் போட்டிகளில் 393 விக்கெட்களையும் வீழ்த்தி இருக்கிறார். அவர் தற்போது ஐசிசி கிரிக்கெட் கமிட்டியில் உறுப்பினராக இருக்கிறார்.

shaun pollock icc

அந்த கமிட்டி தான் கிரிக்கெட்டில் முக்கிய விதிமாற்றங்களை செய்யும். அந்த வகையில் ஷான் பொல்லாக் ஐசிசி விதிகளில் செய்யப்பட உள்ள முக்கிய மாற்றம் ஒன்றை பற்றி பேசி இருக்கிறார். சமீப காலமாக டி20 போட்டிகளில் பந்து வீச்சாளர்கள் அதிக வைடு பந்துகளை வீசி வருகின்றனர்.

டி20 போட்டிகளில் பந்துவீச்சாளர் பந்து வீச ஓடிவரும்போது பேட்ஸ்மேன் தனது காலை நகர்த்தி வைக்கிறார். அப்படி செய்யும்போது பந்து வீச்சாளர் ஓடி வந்து கொண்டிருக்கும்போதே தான் பந்து வீச வேண்டிய இடம் எது என்ற குழப்பத்திற்கு ஆளாகி பந்தை வேறு திசையில் வீசுகிறார். அது பலமுறை வைடு ஆக மாறிவிடுகிறது.

ஆனால், இது பவுலர்களுக்கு பாதகமான ஒன்று. இது சரியல்ல. பந்துச்சாளர்களுக்கு ஆதரவாக ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்பதால் ஐசிசி கிரிக்கெட் கமிட்டியில் வைடு விதி குறித்து மாற்றம் ஒன்றை செய்ய உள்ளதாக ஷான் பொல்லாக் கூறி இருக்கிறார். இனி பந்துவீச்சாளர் ஓடி வரும் போது பேட்ஸ்மேன் தனது இடத்தை விட்டு நகர்ந்தால், இந்த புதிய வைடு விதியின்படி தான் அம்பயர் முடிவு எடுப்பார் எனவும் சுட்டிக்காட்டி இருக்கிறார் பொல்லாக்.

ஆனால், அந்த விதி என்ன என்பது பற்றி ஷான் பொல்லாக் விளக்கம் அளிக்கவில்லை. பொதுவாக ஏப்ரல் 1 முதல் ஐசிசி புதிய விதிகளை அமல்படுத்தும். அதுபோல 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் இந்த விதி அமலுக்கு வரவும் வாய்ப்பு உள்ளது. இந்த விதியால் வேகப் பந்துவீச்சாளர்கள் சற்று நிம்மதி அடையலாம்.

Story first published: Saturday, January 11, 2025, 18:15 [IST]
Other articles published on Jan 11, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+