Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சூனியம் வைக்கிறாரா ரிக்கி பாண்டிங்? பக்கத்தில் வந்து புஸ்வானமாகும் வீரர்கள்..உடையாமல் நிற்கும் சாதனை

மும்பை: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் சூனியம் வைப்பதாக ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.

90ஸ் கிட்ஸ்க்கு வில்லனாக இருந்தவர் என்றால், அது ஆஸ்திரேலிய கேப்டனாக இருந்த பாண்டிங் தான்.

டெஸ்ட், உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை என அனைத்திலும் பாண்டிங்கின் அணி அசைக்க முடியாத அணியாக விளங்கியது.

சச்சின் ரெக்காட்ஸ்

சச்சின் ரெக்காட்ஸ்

கேப்டனாக மட்டுமல்லாமல் ரிக்கி பாண்டிங், பேட்ஸ்மேனாகவுஙம களத்தில் கலக்குவார். ஒரு காலத்தில் டெஸ்டில் சச்சினின் அதிக சதம் சாதனையை உடைக்கும் வாய்ப்பு பாண்டிங்கிற்கு மட்டும் தான் இருந்தது. ஆனால் சச்சின், அடுத்தடுத்து சதங்களை விளாசி 51 என்று தனது சதங்களின் எண்ணிக்கையை உயர்த்தினார். சச்சின் சாதனைக்கு அருகில் எந்த வீரரும் வந்தால் ஃபார்ம் அவுட் ஆகி விடுவதாக ஒரு புரளி கிளம்பியது.

பாண்டிங் மேஜிக்

பாண்டிங் மேஜிக்

டெஸ்ட் கிரிக்கெட்டில் சங்ககாரா, அலெஸ்டர் குக் , காலிஸ் ஆகியோர் சச்சின் சாதனையை உடைக்க வாய்ப்பு இருந்தும், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றனர். தற்போது சச்சினையே மிஞ்சும் அளவுக்கு ரிக்கி பாண்டிங்கின் பிளாக் மேஜிக் சர்வதேச கிரிக்கெட்டை ஆட்டி படைத்து வருகிறது. பாண்டிங் சாதனைக்கு அருகில் யாராவது வந்தால், அது அப்படியே நின்று விடுகிறது.

தடுமாறும் கோலி

தடுமாறும் கோலி

உதாரணமாக சர்வதேச கிரிக்கெட்டில் பாண்டிங் 71 சதம் அடித்து இருக்கிறார். 2019 வரை சதத்துக்கு மேல் சதமாக விளாசி வந்த விராட் கோலி, கடந்த 30 மாதங்களாக 70 வது சதத்திலேயே சிக்கி கொண்டு இருக்கிறார். ஒரு சதம் அடித்து பாண்டிங் சாதனையை சமன் செய்ய முடியாமல் தவித்து வருகிறார் விராட் கோலி. இதே போன்று ஒருநாள் போட்டியில் பாண்டிங் 30 சதங்களை அடித்து இருக்கிறார்.

சாதனைகள் போச்சு

சாதனைகள் போச்சு

தற்போது ரோகித் சர்மா 29 சதங்கள் அடித்துள்ள ரோகித் சர்மா, கடந்த ஒரு ஆண்டாக சதம் அடிக்க முடியாமல் தவித்து வருகிறார். இதே போன்று கேப்டனாக 28 முறை ஆட்டநாயகன் விருது வென்றவர் என்ற சாதனையை பாண்டிங் படைத்திருந்தார். இந்த சாதனையை 27 முறை நிகழ்த்திய விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

ரசிகர்கள் கிண்டல்

ரசிகர்கள் கிண்டல்

இதே போன்று கேப்டனாக தொடர்ந்து 20 சர்வதேச போட்டியில் வென்று பாண்டிங் சாதனை நிகழ்த்தி இருந்தார். ஆனால் ரோகித் அதனை சமன் செய்ய நேற்று வாய்ப்பு கிடைத்த நிலையில் தோல்வியை தழுவினார். இதனால் ரிக்கி பாண்டிங் சாபத்தால் தான் வீரர்களால் அதனை நெருங்க முடியவில்லை என்று ரசிகர்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

Story first published: Monday, July 11, 2022, 18:42 [IST]
Other articles published on Jul 11, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+