For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

1 டிக்கெட் 19 லட்சம்.. டோர் டெலிவரி.. இந்தியா - பாக். மேட்ச்.. பரபரக்கும் பிளாக் டிக்கெட் மார்க்கெட்

மும்பை : இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் 2023 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் டிக்கெட் விலை கிறுகிறுக்க வைக்கும் வகையில் விற்கப்பட்டு வருகிறது.

ஆம், ஒரு டிக்கெட்டின் விலை ரூ.19 லட்சத்திற்கு விற்கப்பட்டு வருகிறது. இதை வீட்டிற்கே வந்து கொடுக்க ரூ.400 தனியாம்.

CWC 2023 : India – Pakistan match tickets selling for Rs.19 lakhs in black ticket market

2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் வரலாறு காணாத அளவில் சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்து சாதனை படைத்தது.

இந்த முறை, ஆன்லைனில் சில ஆயிரம் டிக்கெட்களும், நேரில் குறைந்த அளவில் டிக்கெட்களும் விற்க பிசிசிஐ முடிவு செய்தது. அதில் பல மைதானங்களில் நேரில் டிக்கெட் விற்பனை என்பது வெறும் கண் துடைப்பாக சில நூறு டிக்கெட்கள் மட்டுமே விற்கப்படுவதாக புகார் எழுந்தது.

தற்போது ஆன்லைனில் bookmyshow-வில் எந்த போட்டிக்கும் டிக்கெட் இல்லை. அனைத்து போட்டிகளுக்கான டிக்கெட்களும் விற்றுத் தீர்ந்து விட்டது. அதிலும் இந்தியா - பாகிஸ்தான் மோதும் லீக் போட்டிக்கான டிக்கெட் சில நிமிடங்களில் காலியானது.

அந்தப் போட்டியை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசை கொண்ட பல ரசிகர்கள் இதனால் ஏமாற்றம் அடைந்தனர். இவர்களுக்கு தற்போது ஒரே ஒரு வாய்ப்பு மட்டுமே உள்ளது. மூன்றாம் நபர் டிக்கெட் விற்கும் சில வெப்சைட்கள் உலகம் முழுவதும் உள்ளன.

அதில் ஒன்றுதான் viagogo. இந்த தளத்தில் ஏற்கனவே விளையாட்டுப் போட்டிகள் அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளின் விற்ற டிக்கெட்களை மறு விற்பனை செய்ய முடியும். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் பிளாக் டிக்கெட்.

அந்த வகையில், இந்த தளத்தில் தற்போது இந்தியா - பாகிஸ்தான் உலகக்கோப்பை போட்டிக்கான டிக்கெட் விற்பனை நடந்து வருகிறது. வெறும் 100 டிக்கெட்கள் மட்டுமே உள்ளன. அதில் அதிகபட்ச டிக்கெட் விலை ரூ.19,51,580. குறைந்தபட்ச விலை ரூ.66,000. இதைத் தவிர்த்து இந்த ஆன்லைன் டிக்கெட்கள் செல்லுமா? என யோசிப்பவர்களுக்கு அந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் வகையில் வீட்டுக்கே வந்த கவுன்டரில் வாங்கிய டிக்கெட்டை கொடுப்பார்களாம்.

லக்னோவில் நடைபெறும் இந்தியா - இங்கிலாந்து போட்டிக்கான டிக்கெட் விலை ரூ.2,34,632. இந்தியா - ஆப்கானிஸ்தான் போட்டிக்காகன குறைந்த விலை டிக்கெட் ரூ.38,877. அதிகபட்ச விலை ரூ.2,34,622.

சரி சென்னையில் நடைபெறும் போட்டிக்கான டிக்கெட்டாவது குறைவாக இருக்குமா? என பார்த்தால், பாகிஸ்தான் போட்டிக்கு அடுத்ததாக சென்னையில் நடைபெற உள்ள இந்தியா - ஆஸ்திரேலியா போட்டிக்கு தான் செம போட்டி. இந்த போட்டிக்கான டிக்கெட் விலை அதிகபட்சமாக ரூ.9,31,295.

இவ்வளவு விலை கொடுத்து யாராவது டிக்கெட் வாங்குவார்களா? என நினைக்க வேண்டாம். பல பெரும் பணக்காரர்கள் கடைசி நிமிடத்தில் இது போன்ற தளங்களில் டிக்கெட்டை வாங்கி விடுவார்கள். அதைவைத்து தான் இந்த விலைக்கு டிக்கெட்கள் விற்கப்படுகின்றன.

நம்ம கிட்ட ஒரு நாலு டிக்கெட் இருந்தா ஒரு வீடு கட்டிரலாம் போலையே!

Story first published: Tuesday, September 5, 2023, 12:34 [IST]
Other articles published on Sep 5, 2023
English summary
CWC 2023 : India – Pakistan match tickets were already sold out. Now, they are selling for Rs.19 lakhs in black ticket market.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+