Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த தமிழக கோச் தான் வேண்டும்.. பஞ்சாயத்தை கூட்டிய வங்கதேச கேப்டன்.. கடைசி நிமிட ட்விஸ்ட்!

தாகா : தமிழக கிரிக்கெட் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகர் ஸ்ரீதரன் ஸ்ரீராம் வங்கதேச அணியின் தொழில்நுட்ப ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் வங்கதேச கிரிக்கெட் போர்டின் விருப்பத்தில் நடக்கவில்லை, மாறாக அந்த அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன், தமிழக கிரிக்கெட் பயிற்சியாளரான ஸ்ரீதரன் ஸ்ரீராம்-ஐ உலகக்கோப்பை தொடங்கும் முன் வங்கதேச அணியின் ஆலோசகராக நியமித்தே ஆக வேண்டும் என வாதம் செய்து அவரை நியமிக்க வைத்துள்ளார்.

CWC 2023 : Shakib AL Hasan played a huge role in comeback of Sridharan Sriram

வங்கதேச அணி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இந்தியா கிளம்ப உள்ளது. அதற்கு இன்னும் சில தினங்களே இருந்த நிலையில், இந்த சம்பவங்கள் அரங்கேறி உள்ளன.

ஸ்ரீதரன் ஸ்ரீராம் ஏற்கனவே சில மாதங்கள் வங்கதேச அணியின் ஆலோசகராக செயல்பட்டார். ஆனால், முழு நேர பயிற்சியாளர் நியமிக்கப்பட்ட பின் வங்கதேச கிரிக்கெட் போர்டு அவரை அனுப்பி விட்டது. ஆனால், அவரது ஆலோசனைகளின் மதிப்பை அறிந்த ஷகிப் அல் ஹசன் தற்போது அவரை மீண்டும் அணிக்கு அழைத்து வந்துள்ளார். குறிப்பாக, உலகக் கோப்பை தொடரில் வங்கதேச அணி சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற நோக்கில் இதை செய்துள்ளார் ஷகிப் அல் ஹசன்.

முன்னதாக வங்கதேச அணி ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் தோல்வி அடைந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. அந்த அணியின் வீரர்கள் சரிவர ஆடுவதில்லை என்ற புகாரை ஒவ்வொரு போட்டி முடிந்த உடன் கேப்டன் ஷகிப் அல் ஹசன் பாட்டாக பாடி வந்தார்.

தற்போதைய பயிற்சியாளர் சண்டிகா ஹதுருசின்கா தனி ஆளாக வங்கதேச அணியை நிர்வகிக்க முடியாமல் இருப்பதாக கருதியோ என்னவோ, ஷகிப் அல் ஹசன் தன் அணி வீரர்களுக்கு சரியான ஆலோசனைகள் வழங்க ஸ்ரீராமை ஆலோசராக தேர்வு செய்துள்ளார்.

CWC 2023 : Shakib AL Hasan played a huge role in comeback of Sridharan Sriram

ஸ்ரீதரன் ஸ்ரீராம் தமிழக அணிக்காக ரஞ்சி தொடர் போன்ற உள்ளூர் போட்டிகளில் ஆடி இருக்கிறார். இந்திய அணியில் சில போட்டிகளில் அவர் ஆடி இருக்கிறார். ஓய்வு பெற்ற பின் அவர் பல்வேறு அணிகளுக்கு பயிற்சியாளராகவும், ஆலோசகராகவும் இருந்துள்ளார்.

அதில் உச்சகட்டமாக ஆஸ்திரேலிய அணிக்கு சுழற் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்தார். ஆஸ்திரேலிய அணி அத்தனை சீக்கிரத்தில் இந்தியர்களை பயிற்சியாளர்களாக நியமித்து விடாது. பெரும்பாலும் ஆஸ்திரேலியர்களே அந்த அணியின் அனைத்து பயிற்சி மற்றும் ஆலோசனைகளை செய்வார்கள். ஆனால், ஸ்ரீதரன் ஸ்ரீராமின் திறமையை அறிந்து அவரை ஆஸ்திரேலிய அணி பயன்படுத்தி வந்தது.

தற்போது அவரின் திறமையை உணர்ந்தே ஷகிப் அல் ஹசனும் அவரை ஆலோசகராக அணியில் சேர்க்க போராடி இருக்கிறார்.

Story first published: Thursday, September 21, 2023, 16:16 [IST]
Other articles published on Sep 21, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+