மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் இளம் நாயகன் சுப்மன் கில் தற்போது தான் தன்னுடைய முதல் உலகக்கோப்பை தொடரில் விளையாடுவதற்காக ஆயத்தமாகி வருகிறார். ஏற்கனவே ரசிகர்கள் கில்லை பெரிய நட்சத்திரங்களுடன் ஒப்பிட்டு வருகிறார்கள்.
இதற்கு தகுந்தார் போல் தற்போது சுப்மன் கில் ஒரு நாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இந்த நிலையில் ரசிகர்களால் சின்ன தல என்று அழைக்கப்படும் ரெய்னா கில்லை விராட் கோலி ரசிகர்களும் கோர்த்து விட்டு சென்றிருக்கிறார்கள்.

இது தொடர்பாக ரெய்னா அளித்த பேட்டி ஒன்றில் உலக கோப்பையில் இந்திய அணியின் முக்கிய வீரராக சுப்மன் கில் விளங்குவார். கில் அடுத்த சூப்பர் ஸ்டார் ஆக வரவேண்டும் என ஆசைப்படுகிறார். அடுத்த விராட் கோலியாக விளங்க வேண்டும் என கில் நினைக்கிறார். இந்த உலகக்கோப்பை முடிந்த பிறகு நாம் அனைவரும் கில்லை பற்றி தான் அதிகம் பேசிக் கொண்டு இருப்போம்.
கில்லின் பார்ம் மற்றும் பேட்டிங் விளையாடும் போது அவருடைய ஸ்பீடு அனைத்துமே பிரமிக்கும் வகையில் இருக்கிறது. சுழற் பந்துவீச்சாளர்கள் அவருக்கு எப்படி பந்து வீசு வேண்டும் என்று தெரியாமல் முழிக்கிறார்கள். வேகப்பந்துவீச்சாளர்கள் பந்தை ஸ்விங் செய்யவில்லை என்றால் சுப்மன் கில் அதனை நேராகவும், பிளிக் ஷாட் அடித்து ரன் சேர்க்க முடியும்.

என்னைப் பொறுத்தவரை கில்லின் மனநிலையை பார்க்கும் போது 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் ரோகித் சர்மா என்ன செய்தாரோ அதையே இம்முறை இந்திய அணிக்காக கில் செய்வார் என்று தோன்றுகிறது. கில்லால் ஐம்பது ஓவரை முழுமையாக பேட்டிங் செய்ய முடியும். பிறக்கும்போதே தலைவனுக்கு உரிய குணத்தோடு சுப்மன் கில் பிறந்திருக்கிறார் என்று எனக்குத் தோன்றுகிறது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தொடர்ந்து இந்திய அணிக்காக கில் ரன் சேர்த்து வருகிறார். இடையில் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கொஞ்சம் தடுமாறினாலும் தற்போது அவர் தன்னுடைய ஃபார்முக்கு திரும்பி ஆசிய கோப்பையில் அதிக ரன்களை அடித்திருக்கிறார். சுப்மன் கில்லை பார்க்கும்போது அவர் பாசிட்டிவ் எண்ணத்துடன் இருப்பது தெரிகிறது. அவருடைய பேட்டிங் ஃபுட் வொர்க்கும் நன்றாக உள்ளது. தற்போது கில் 40 ரன்கள் அவுட் ஆகாமல் அதனை ஐம்பதாகவும் சதமாகவும் மாற்றும் உத்வேகத்தை பெற்றிருக்கிறார்.