Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CWC 2023: உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணை.. இந்திய அணி போட்டிகள் எப்போது? முழு விவரம்!

சென்னை: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணி விளையாடும் போட்டிகளுக்கான அட்டவணையை பார்க்கலாம்.

13வது உலகக்கோப்பை கிரிக்கெட் இன்று அகமதாபாத் மைதானத்தில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்த உலகக்கோப்பை தொடரில் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த உலகக்கோப்பை தொடரில் குரூப் சுற்றில் பத்து அணிகளும் ரவுண்டு ராபின் அடிப்படையில் தங்களுக்குள் மோதிக் கொள்வார்கள். இதில் டாப் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி சற்றுக்கு தகுதிபெறும்.

CWC 2033: India Matches Schedule and World Cup 2023 Schedule and Ground Details

இந்த உலகக்கோப்பை தொடரில் நாளை நடக்கவுள்ள போட்டியில் பாகிஸ்தான் - நெதர்லாந்து அணிகளும், அக்.7ல் வங்கதேசம் - ஆஃப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா - இலங்கை அணிகளும் மோதவுள்ளன. அதேபோல் அக்.8ஆம் தேதி இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் ஆடும் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ளது.

தொடர்ந்து அக்.11ஆம் தேதி இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டெல்லி மைதானத்தில் நடக்கவுள்ளது. பின்னர் அக்.14ஆம் தேதி உலகக்கோப்பை தொடரின் மிகமுக்கிய போட்டியான இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் அகமதாபாத் மைதானத்தில் நடக்கவுள்ளது. அகமதாபாத் மைதானத்தில் 1.32 லட்சம் ரசிகர்கள் அமர முடியும் என்பதால், இந்தப் போட்டியை நேரில் பார்க்க ரசிகர்கள் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

அதேபோல் அக்.19ல் இந்தியா - வங்கதேசம் அணிகள் புனே மைதானத்தில் மோதவுள்ளன. அதன்பின்னர் அக்.22ல் மிகமுக்கியமான இந்தியா - நியூசிலாந்து போட்டி நடக்கவுள்ளது. அதன்பின்னர் இந்திய அணிக்கு சரியாக ஒரு வாரம் ஓய்வு கிடைக்கிறது. பின்னர் அக்.19ல் இங்கிலாந்து அணியை எதிர்த்து இந்தியா லக்னோ மைதானத்தில் களமிறங்கவுள்ளது.

அதேபோல் நவ.2ஆம் தேதி இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மும்பையிலும், நவ.5ல் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கொல்கத்தாவிலும் நடக்கவுள்ளது. பின்னர் லீக் போட்டிக்கான கடைசி நாளான நவ.12ல் நெதர்லாந்து அணியை எதிர்த்து இந்தியா களமிறங்கவுள்ளது. அதன்பின் நவ.15ஆம் தேதி முதல் அரையிறுதி போட்டியும், நவ.16ஆம் தேதி 2வது அரையிறுதி போட்டியும், நவ.19ல் இறுதிப்போட்டியும் நடக்கவுள்ளது.

Story first published: Thursday, October 5, 2023, 12:21 [IST]
Other articles published on Oct 5, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+