Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

காமன்வெல்த் 2026: இந்தியாவுக்கு 7வது தங்கம்.. குத்துச்சண்டையில் ப்ரீத்தி, ஜாஸ்மீன் தங்கம் வென்றார்

கிளாஸ்கோ: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 2026-இல் மகளிருக்கான 54 கிலோ எடைப் பிரிவு குத்துச்சண்டை இறுதிப் போட்டியில் இந்தியாவின் பிரீத்தி பவார் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். சனிக்கிழமை நடைபெற்ற இறுதிச் சுற்றில் கனடாவின் ஸ்கார்லெட் சவன்னா டெல்கடோவை வீழ்த்தி பிரீத்தி இந்தியாவுக்கான தங்கப் பதக்கத்தை உறுதி செய்தார்.

ஹரியானாவின் பிவானி பகுதியைச் சேர்ந்த 22 வயதான இளம் வீராங்கனையான பிரீத்தி பவார், 5-0 என்ற கணக்கில் ஒருமனதான நடுவர்களின் தீர்ப்பு மூலம் இறுதிப் போட்டியில் அபார வெற்றி பெற்றார். இவர் இதற்கு முன்பு புதுதில்லியில் நடைபெற்ற 2025 உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக தங்கப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Preeti Pawar

2026 காமன்வெல்த் போட்டிகளில் குத்துச்சண்டைப் பிரிவில் இந்தியாவுக்குக் கிடைத்துள்ள முதல் தங்கப் பதக்கம் இதுவாகும்.இதே போன்று மகளிர் 57 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை ஜாஸ்மீன் லாம்போரியா தங்கப் பதக்கம் வென்றார். நார்தன் ஐயர்லாந்து வீராங்கனையானமைக்கிலோ வால்சை 5க்கு0 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியாவுக்கு 7வது தங்கப் பதக்கத்தை வென்று தந்தார். இந்திய ராணுவத்தில் பணிபுரியும் இவர், கடந்த காமன்வெல்த் விளையாட்டில் வெண்கலம் வென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடப்புத் தொடரில் மேலும் 8 இந்திய குத்துச்சண்டை வீரர்கள் தங்கப் பதக்கத்திற்கான இறுதிப் போட்டிகளில் களம் காண உள்ளதால், இந்தியாவின் தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

காமன்வெல்த் போட்டி 2026: பதக்கப் பட்டியலில் இந்தியாவுக்கு எந்த இடம்? டாப் 5 இடங்களில் யார்?

காமன்வெல்த் போட்டி 2026: பதக்கப் பட்டியலில் இந்தியாவுக்கு எந்த இடம்? டாப் 5 இடங்களில் யார்?
Story first published: Saturday, August 1, 2026, 16:03 [IST]
Other articles published on Aug 1, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+