For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விசாகபட்டினத்தை மிரட்டும் மழை.. நாளைய இறுதி ஒருநாள் போட்டி ரத்தாக வாய்ப்பு! தொடர் டிரா?

இந்தியா-நியூசிலாந்து நடுவே நாளை விசாகபட்டினத்தில் நடைபெற உள்ள, தொடரின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் 5வது ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட வாய்ப்புள்ளது.

By Veera Kumar

விசாகபட்டினம்: இந்தியா-நியூசிலாந்து நடுவேயான 5வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி மழையால் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே போட்டி தொடர் டிராவில் முடிவடைய அதிக வாய்ப்புள்ளது.

5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட, நியூசிலாந்து அணி, இந்தியா வந்துள்ளது. தரம்சாலா, மொகாலி நகரங்களில் நடைபெற்ற போட்டிகளில் இந்தியாவும், டெல்லி மற்றும் ராஞ்சியில் நடைபெற்ற போட்டிகளில் நியூசிலாந்தும் வென்றதால் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

Cyclone likely to play spoilsport during India vs New Zealand 5th ODI

வெற்றி-தோல்வியை நிர்ணயிக்கும் 5வது ஆட்டம் ஆந்திராவின் விசாகபட்டினத்தில் நாளை பகல் 1.30 மணிக்கு தொடங்க வேண்டும். ஆனால் வங்கக்கடலில் உருவான புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைபெற்று நாளை வடக்கு தமிழகம் மற்றும் ஆந்திராவின் கடலோர பகுதிகளில் கன மழையை கொட்ட வாய்ப்புள்ளதாக வானிலை இலாகா அறிவித்துள்ளது.

எனவே, நாளைய போட்டி நடைபெறுவது சந்தேகம். போட்டி நடைபெறாமல் புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டால் தொடர் சமனில் முடியும். நியூசிலாந்து இதுவரை இந்திய மண்ணில் ஒருநாள் தொடரை வென்றதில்லை. சமன்படுத்திய மகிழ்ச்சியோடு சொந்த நாட்டுக்கு அவர்கள் கிளம்பலாம்.

Cyclone Kyant likely to play spoilsport during India vs New Zealand 5th ODI.

இந்தியா-நியூசிலாந்து நடுவேயான 5வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி மழையால் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே போட்டி தொடர் டிராவில் முடிவடைய அதிக வாய்ப்புள்ளது.

Story first published: Friday, October 28, 2016, 9:57 [IST]
Other articles published on Oct 28, 2016
English summary
Cyclone Kyant likely to play spoilsport during India vs New Zealand 5th ODI.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+