For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டீம் செலக்டருக்கு அணியில் இடம் கொடுத்து மயக்கம் வர வைத்த இங்கிலாந்து அணி.. யாருக்கு தெரியுமா?

லண்டன்: சிரில் வாஷ்ப்ரூக் இங்கிலாந்து அணிக்கு விளையாடிய வீரர். செலெக்டராக இருக்கும் பொழுது டெஸ்ட் கிரிக்கெட்டில் வாய்ப்பு கிட்டி மறுபடியும் வீரராக விளையாடி அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தியவர்,

England test

சிரில் வாஷ்ப்ரூக் புள்ளி விவரம் -

6 சதங்கள். 2569 ரன்கள். 37 டெஸ்டுகள்.

அறிமுக டெஸ்ட் 1937

கடைசி டெஸ்ட் 1956.

இரண்டாம் உலக போருக்கு முன்பும், பிறகும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடியவர்.

இவர் எடுத்த சதங்கள்

மெல்போர்ன், 1947 (112)

லீட்ஸ், 1948 (143)

ஜோஹனஸ்பர்க், 1948 (195)

லீட்ஸ், 1948 (103*)

லார்ட்ஸ், 1950 (114)

நோட்டிங்காம் , 1950 (102)

ஆஸ்திரேலியா (2), மேற்கு இந்திய தீவுகள் (2), தென் ஆப்பிரிக்கா (1), நியூசிலாந்து (1) ஆகிய அணிகளுக்கு எதிராக சதங்கள் பதிவு செய்து இருக்கிறார். இவர் அறிமுக மற்றும் கடைசி டெஸ்ட்களை இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் விளையாடினார். 1948 ல் லீட்ஸ் மைதானத்தில் இவர் ஆடிய டெஸ்ட் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது.

டெஸ்டின் நான்காவது இன்னிங்ஸ் இலக்கு 404 ரன்கள். ஆஸ்திரேலிய கேப்டன் டான் ப்ராட்மனின் கடைசிக்கு முந்தின டெஸ்ட் மேட்ச் இது. ப்ராட்மன், வெற்றி இலக்கை சந்திக்க அவர் பேட்டிங்கில் முன்னின்று வழி நடத்தினார். முதல் இன்னிங்சில் ப்ராட்மன் எடுத்த ரன்கள் 33 மட்டுமே. ஆனால் இரண்டாவது இன்னிங்சில் ப்ராட்மன் ஆட்டம் முடியும் வரையில் விளையாடி, ஆஸ்திரேலிய அணி வெற்றி வாகை சூட பெரிதும் உதவினார். ப்ராட்மனின் ஸ்கோர் 173*. இது தான் டான் ப்ராட்மனின் கடைசி டெஸ்ட் சதம் ஆகும்.

இந்த டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி நான்காவது இன்னிங்சில் 400 ரன்களுக்கு மேல் எடுத்து வெற்றி பெற்று சரித்திரம் படைத்தது. 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வென்றது. இந்த டெஸ்ட் மொத்தம் 5 சதங்களைக் கண்டது. அவை -

இங்கிலாந்து வீரர்கள்

சிரில் வாஷ்ப்ரூக் 143
பில் எட்ரிச் 111

ஆஸ்திரேலிய வீரர்கள்

நீல் ஹார்வே 112
ஆர்த்தர் மோரிஸ் 182
டான் ப்ராட்மன் 173*

அணிகளின் ஸ்கோர்

இங்கிலாந்து - 496 & 365 / 8 டிக்ளர்

ஆஸ்திரேலியா - 458 & 404 / 3

டெஸ்ட் போட்டிகளில் ஸர் லென் ஹட்டனுடன் 51 முறை

சிரில் வாஷ்ப்ரூக் இங்கிலாந்து அணிக்காக துவக்கம் அளித்து இருக்கிறார். 1956 ஆம் ஆண்டு இவர் வீரர்களை தேர்வு செய்யும் குழுவில் செலக்டராக இருந்தார். அப்பொழுது இவருக்கு வயது 41. சுமார் 5 வருடங்களுக்கு முன்பு கடைசியாக டெஸ்ட் விளையாடினார்.

தேர்வு குழுவினர் அடுத்த டெஸ்டுக்கு வீரர்களை தேர்வு செய்ய தயார் ஆகிக் கொண்டு இருந்தனர். இவரை அந்த அறையை விட்டு வெளியே சென்று விட்டு சிறிது நேரம் கழித்து வர சொன்னார்கள். திரும்பி வந்தவரை இன்ப அதிர்ச்சி வரவேற்றது. ஆம், அவருக்கு அணியில் இடம் கொடுத்து அவரை மறுபடியும் மைதானத்தில் வீரராக களம் இறங்க வாய்ப்பு அளித்தனர்.

அந்த ஹெட்டிங்லி டெஸ்ட்டில் இவர் விளையாட சென்ற பொழுது இங்கிலாந்து அணியின் ஸ்கோர் பரிதாப நிலையில் 17 / 3 என்று இருந்தது. கேப்டன் பீட்டர் மேயுடன் ஜோடி சேர்ந்து அவர் சேர்த்த ரன்கள் 187. அதில் இவரது பங்கு 98. இங்கிலாந்து அணி அந்த மேட்சில் வென்றது.

பீட்டர் மே 101 ரன்கள் குவித்தார். ஜிம் லேக்கர் 11, டோனி லாக் 7 விக்கெட்கள் வீழ்த்தினர்.

இவர் 19 வருடங்களுக்கு மேல் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடியுள்ளார். 84 வருடங்களுக்கு மேல் வாழ்ந்த இவர் 1999 ல் மறைந்தார். முதல் தர போட்டிகளில் லங்கஷயர் அணிக்கு விளையாடினார். சிரில் வாஷ்ப்ரூக் 6 கேப்டன்களின் தலைமையில் டெஸ்ட் ஆடியவர்.

oooooooooooooooooooooooooooooooooooooooooooo

வாசுதேவன், பெங்களூரு

Story first published: Monday, July 22, 2024, 16:54 [IST]
Other articles published on Jul 22, 2024
English summary
Cyril Washbrook was asked to play for England when he was team selector
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+