Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அதிக விக்கெட்கள் வீழ்த்தி சாதனை.. டேல் ஸ்டெய்ன் கலக்கல்.. ஷான் பொல்லாக்-கை முந்தினார்

சென்சுரியன் : தென்னாபிரிக்க வேகப் பந்துவீச்சாளர் டேல் ஸ்டெய்ன் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் எடுத்த பட்டியலில் தன் நாட்டை சேர்ந்த ஷான் பொல்லாக்கை முந்தியுள்ளார்.

இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய தென்னாபிரிக்க வீரர் என்ற சாதனையை செய்தார் ஸ்டெய்ன்.

இதற்கு முன் எடுத்த விக்கெட்கள்

இதற்கு முன் எடுத்த விக்கெட்கள்

ஸ்டெய்ன் கடந்த ஜூலை மாதம் தான் கடைசியாக ஆடிய டெஸ்ட் போட்டியில் வீழ்த்திய விக்கெட்கள் வரை 421 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். அதன் மூலம் பொல்லாக்குடன் முதல் இடத்தை பகிர்ந்து கொண்டு இருந்தார்.

பொல்லாக்கை முந்தினார்

பொல்லாக்கை முந்தினார்

சுமார் ஐந்து மாதம் கழித்து இப்போது பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் முதல் விக்கெட் வீழ்த்தியதன் மூலம் பொல்லாக் சாதனையை முந்தினார் ஸ்டெய்ன். பாகிஸ்தான் வீரர் சமான் விக்கெட்டை எடுத்ததன் மூலம் இந்த சாதனையை செய்தார்.

27 டெஸ்ட் போட்டிகளை தவறவிட்டார்

27 டெஸ்ட் போட்டிகளை தவறவிட்டார்

2015 முதல் காயம் காரணமாக சுமார் 27 டெஸ்ட் போட்டிகளை தவறவிட்ட ஸ்டெய்ன், அதற்கு முன் சுமார் 263 வாரங்கள் டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதல் இடத்தில் இருந்தார். தன் 400வது விக்கெட்டை ஜூலை 2015இல் எடுத்து இருந்தார் ஸ்டெய்ன்.

மூன்று வருட போராட்டம்

மூன்று வருட போராட்டம்

அடுத்த 22 விக்கெட்களை எடுக்க மூன்று வருட காலம் ஆகியுள்ளது. இதனிடையே நான்கு முறை அவருக்கு காயம் ஏற்பட்டது. இந்த ஆண்டு முதல் மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் ஆடி வரும் ஸ்டெய்ன் இன்னும் தன் பழைய பார்முக்கு திரும்பவில்லை.

உலகளவில் முன்னேற்றம்

உலகளவில் முன்னேற்றம்

தற்போது உலகளவில் அதிக டெஸ்ட் விக்கெட்கள் வீழ்த்திய வீரர்கள் வரிசையில் 11வது இடத்தில் இருக்கிறார் ஸ்டெய்ன். ரிச்சர்ட் ஹாட்லீயின் 431 விக்கெட்களை ஸ்டெய்ன் விரைவில் முந்த வாய்ப்புள்ளது. 431 விக்கெட்களுக்கு மேல் எடுத்தால் அதிக விக்கெட்கள் எடுத்தவர்கள் பட்டியலில் ஸ்டெய்ன் உலகளவில் முதல் பத்து இடங்களுக்குள் வந்து விடுவார்.

Story first published: Wednesday, December 26, 2018, 18:27 [IST]
Other articles published on Dec 26, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+