Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கபில் தேவை முந்தி சாதனை! தெ.ஆப்பிரிக்க வீரர் டேல் ஸ்டெய்ன் புதிய அத்தியாயம்!

டர்பன் : தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர் டேல் ஸ்டெய்ன் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் கபில் தேவை முந்தினார்.

தென்னாப்பிரிக்க அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளரான ஸ்டெய்ன், தற்போது 437 விக்கெட்கள் வீழ்த்தி அதிக டெஸ்ட் விக்கெட்கள் வீழ்த்தியவர்கள் வரிசையில் ஏழாம் இடத்தில் இருக்கிறார்.

இலங்கை டெஸ்ட்

இலங்கை டெஸ்ட்

இலங்கை அணிக்கு எதிரான டர்பன் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்க்ஸில் டேல் ஸ்டெய்ன் 4 விக்கெட்கள் வீழ்த்தினார். அதன் மூலம் டெஸ்ட் அரங்கில் 437 விக்கெட்கள் வீழ்த்தினார்.

பின்னே சென்ற கபில் தேவ்

பின்னே சென்ற கபில் தேவ்

இந்தியாவின் கபில் தேவ் 434 விக்கெட்கள் வீழ்த்தி இருந்த நிலையில், அவரை முந்தி உள்ளார் ஸ்டெய்ன். இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராடு-ம் தற்போது 437 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார். இவர்கள் இருவரும் ஏழாம், எட்டாம் இடத்தை பிடித்துள்ளனர். கபில் தேவ் ஒன்பதாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இரண்டு இந்தியர்கள்

இரண்டு இந்தியர்கள்

டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதல் பத்து இடங்களில் இரண்டு இந்தியர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். ஒருவர் அனில் கும்ப்ளே 619 விக்கெட்களுடன் மூன்றாம் இடத்தில் இருக்கிறார். கபில் தேவ் 434 விக்கெட்களுடன் ஒன்பதாம் இடத்தில் இருக்கிறார்.

விக்கெட் வேட்டை

விக்கெட் வேட்டை

டேல் ஸ்டெய்ன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொடர்ந்து காயத்தால் அவதிப் பட்டு வந்தார். அதில் இருந்து மீண்டு வர இரண்டு வருடங்களுக்கும் மேல் ஆனது. சென்ற ஆண்டு முதல் மீண்டும் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் ஆடி வரும் ஸ்டெய்ன், தன் விக்கெட் வேட்டையை துவங்கி உள்ளார்.

புதிய அத்தியாயம்

புதிய அத்தியாயம்

பந்துவீச்சில் நிச்சயம் ஸ்டெய்ன்-இன் பழைய ஆதிக்கம் இல்லை என்றாலும், ஸ்டெய்ன் புதிய அத்தியாயத்தை துவங்கி உள்ளார். தற்போது 35 வயது ஆகும் நிலையில் டேல் ஸ்டெய்ன் இன்னும் சில ஆண்டுகளில் ஓய்வு பெறுவார் என்றே கருதப்படுகிறது.

Story first published: Saturday, February 16, 2019, 13:31 [IST]
Other articles published on Feb 16, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+