Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்படி நடக்கும்னு எதிர்ப்பார்க்கவே இல்லையே.. டேல் ஸ்டெய்னுக்கு செம ஷாக் கொடுத்த தென்னாப்பிரிக்கா!

Recommended Video

ஸ்டெய்னுக்கு அதிர்ச்சி கொடுத்த தென்னாப்பிரிக்கா!- வீடியோ

கேப் டவுன் : தென்னாப்பிரிக்க அணியின் மூத்த வீரர் டேல் ஸ்டெய்ன் கடும் அதிர்ச்சியில் இருக்கிறார். காரணம், இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் அவர் சேர்க்கப்படவில்லை.

தென்னாப்பிரிக்க அணியில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டு வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக டேல் ஸ்டெய்ன் அணியில் தன் இடத்தை இழந்துள்ளார் என இது பற்றி கூறப்படுகிறது.

ஆனால், கடந்த வாரம் வரை டேல் ஸ்டெய்ன் நிச்சயம் தென்னாப்பிரிக்க டி20 மற்றும் ஒருநாள் அணியில் இடம் பெறுவார் என்றே கருதப்பட்டது.

காயங்கள்

காயங்கள்

டேல் ஸ்டெய்ன் கடந்த சில வருடங்களாக பெரிய காயங்களால் தொடர்ந்து கிரிக்கெட் ஆட முடியாமல் அவதிப்பட்டு வருகிறார். நீண்ட இடைவெளிக்குப் பின் தென்னாப்பிரிக்க அணிக்கு திரும்பிய அவர் சிறப்பாகவே பந்து வீசி வந்தார்.

உலகக்கோப்பை தொடர்

உலகக்கோப்பை தொடர்

எனினும், ஐபிஎல் தொடரில் ஏற்பட்ட காயத்தால், அவரால் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க முடியாமல் போனது. அது தென்னாப்பிரிக்க அணிக்கு உலகக்கோப்பை தொடரில் பெரிய பின்னடைவாக அமைந்தது. அந்த அணி உலகக்கோப்பை தொடரில் மோசமான தோல்விகளை பெற்றது.

தென்னாப்பிரிக்க அணி மாற்றம்

தென்னாப்பிரிக்க அணி மாற்றம்

எனவே, அணியை மாற்றி அமைக்கும் திட்டத்தில் இருக்கிறது தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அமைப்பு. அதன் ஒரு பகுதியாக அதிக இளம் வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட திட்டமிடப்பட்டது. பாப் டு ப்ளேசிஸ் டி20 போட்டிகளில் தன் கேப்டன் பதவியையும், அணியில் இடத்தையும் இழந்தார். டி காக் டி20 அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

டெஸ்ட்டில் ஓய்வு

டெஸ்ட்டில் ஓய்வு

அதே சமயம், மூத்த வீரர் ஹஷிம் ஆம்லா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். இதன் பின்னணியில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அமைப்பின் அழுத்தம் இருக்கலாம் என நம்பப்படுகிறது. மற்றொரு மூத்த வீரர் டேல் ஸ்டெய்ன் டெஸ்ட் போட்டிகளில் இருந்து மட்டும் ஓய்வை அறிவித்தார். இனி குறைந்த ஓவர் போட்டிகளில் கவனம் செலுத்த உள்ளதாக தெரிவித்தார்.

தேர்வு செய்யப்படவில்லை

தேர்வு செய்யப்படவில்லை

ஆனால், இந்திய அணிக்கு எதிரான டி20 தொடருக்கான அணி அறிவிக்கப்பட்ட போது அதில் அவரது பெயர் இடம் பெறவில்லை. அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார் டேல் ஸ்டெய்ன். இது குறித்து தன் கருத்தை பதிவு செய்துள்ளார்.

அவர் விலகினார்

அவர் விலகினார்

ஒரு ரசிகர், "அறிவிக்கப்பட்ட அணியின் இறுதியில் "கிறிஸ் மோரிஸ் அணித் தேர்வில் இருந்து தன் பெயரை விலக்கிக் கொண்டார்" என குறிப்பிடப்பட்டுள்ளது" என்று ஒரு ட்வீட் போட்டு இருந்தார்.

நான் ஆடுவேன்

அதன் கீழே கருத்து கூறி உள்ள டேல் ஸ்டெய்ன், "நான் ஆடுவேன் என கூறினேன். ஆனால், என்னை பயிற்சியாளர்கள் தவறவிட்டுவிட்டார்கள்" என கூறி உள்ளார். இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் டேல் ஸ்டெய்ன் நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Story first published: Wednesday, August 14, 2019, 14:59 [IST]
Other articles published on Aug 14, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+