Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தேவையே இல்லை.. கிளம்புங்க.. தோனிக்கு வந்த அதே நிலைமை.. தூக்கி எறியப்பட்ட தென்னாப்பிரிக்க வீரர்!

தோனிக்கு வந்த அதே நிலைமை.. தூக்கி எறியப்பட்ட தென்னாப்பிரிக்க வீரர்!

Recommended Video

Dale Steyn not listed for Cricket South Africa’s contract list

ஜோகன்னஸ்பர்க் : தென்னாப்பிரிக்க அணியின் மூத்த வீரர் டேல் ஸ்டெய்ன் அந்த அணியின் வீரர்கள் ஒப்பந்தந்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் பிசிசிஐ'யின் வீரர்கள் ஒப்பந்தத்தில் இருந்து தோனி பெயர் நீக்கப்பட்டது போலவே டேல் ஸ்டெய்ன் அணியில் ஆட நினைத்தாலும் அவரை நீக்கி உள்ளனர்.

தென்னாப்பிரிக்க அணி இளம் வீரர்கள் படையுடன் தயாராகி வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்க அணி நிலை

தென்னாப்பிரிக்க அணி நிலை

தென்னாப்பிரிக்க அணி 2019 உலகக்கோப்பை தொடரில் மிக மோசமாக ஆடியது. தொடர்ந்து போட்டிகளில் தோல்வி அடைந்து, அந்த தொடரிலேயே அதிகம் எதிர்பார்க்கப்பட்டு, ஏமாற்றிய அணியாக விளங்கியது. அதனால், அணியில் பல மாற்றங்களை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

டி காக் தலைமையில்..

டி காக் தலைமையில்..

கேப்டன் பதவியில் இருந்த பாப் டுபிளெசிஸ் சில மாதங்களுக்கு பின் பதவி விலகினார். இளம் வீரர் க்விண்டன் டி காக் கேப்டன் பதவியை ஏற்றார். அதன் பின் பயிற்சியாளராக முன்னாள் வீரர் மார்க் பவுச்சர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாப் டுபிளெசிஸ் நிலைமை

பாப் டுபிளெசிஸ் நிலைமை

அந்த அணியின் கேப்டனாக பல ஆண்டுகள் இருந்த பாப் டுபிளெசிஸ் வெற்றி பெற்றுத் தரவில்லை, அணியை சரியாக கட்டமைக்கவில்லை என்பதால் பதவி விலக வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது அவர் தென்னாப்பிரிக்க அணியில் சில தொடர்களில் மட்டுமே வாய்ப்பு பெறும் நிலை உள்ளது.

டேல் ஸ்டெய்ன் ஓய்வு

டேல் ஸ்டெய்ன் ஓய்வு

அதே போல, உலகக்கோப்பை தொடருக்கு பின் சிறந்த பேட்ஸ்மேன் ஆன ஹாஷிம் ஆம்லா ஓய்வு பெற்றார். மூத்த வேகப் பந்துவீச்சாளர் டேல் ஸ்டெய்ன் டெஸ்ட் போட்டிகளில் இருந்து மட்டும் ஓய்வு பெற்றார். அதன் பின் டேல் ஸ்டெய்ன் தென்னாப்பிரிக்க அணியில் இடம் பெறுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

டி20 விருப்பம்

டி20 விருப்பம்

அவர் 2020 டி20 உலகக்கோப்பை தொடரில் ஆட ஆர்வமாக இருந்தார். அதனால், டி20 அணியில் தன்னை தேர்வு செய்வார்கள் என நம்பிய அவர் தொடர்ந்து ஏமாற்றம் அடைந்தார். தென்னாப்பிரிக்க அணி நிர்வாகம் அவரை ஒருநாள் மற்றும் டி20 அணியில் தேர்வு செய்யவில்லை.

அதிர்ச்சி தந்த தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் நிர்வாகம்

அதிர்ச்சி தந்த தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் நிர்வாகம்

இந்த நிலையில், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டி20 தொடரில் மொத்தமாக மூன்று போட்டிகளில் ஆட அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்த நிலையில், அவரை வீரர்கள் ஒப்பந்தப் பட்டியலில் இருந்து நீக்கி அதிர்ச்சி அளித்துள்ளது தென்னாப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகம்.

16 வீரர்களுக்கு ஒப்பந்தம்

16 வீரர்களுக்கு ஒப்பந்தம்

புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள வீரர்கள் ஒப்பந்தப் பட்டியலில் 16 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். புதிதாக பீரான் ஹென்ரிக்ஸ் ஒப்பந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். ப்ரீடோரியஸ், ரஸி வான் டேர் டஸ்ஸன், அன்ரிச் நோர்ஜே ஆகியோர் ஒப்பந்த உயர்வை சந்தித்துள்ளனர்.

வீரர்கள் பட்டியல்

வீரர்கள் பட்டியல்

தென்னாப்பிரிக்க அணி புதிய ஒப்பந்த வீரர்கள் - டெம்பா பவுமா, க்விண்டன் டி காக், பாப் டுபிளெசிஸ், டீன் எல்கர், பீரான் ஹென்ரிக்ஸ், ரீஸா ஹென்ரிக்ஸ், கேஷவ் மகாராஜ், எய்டன் மார்கிரம், டேவிட் மில்லர், லுங்கி நிகிடி, அன்ரிச் நோர்ஜே, அன்டில் பெஹ்ளுக்வாயோ, டிவைன் ப்ரிடோரியஸ், காகிசோ ரபாடா, டப்ராயிஸ் ஷம்சி, ரஸ்ஸி வான் டேர் டஸ்ஸன்

மேலும் ஒருவருக்கு வாய்ப்பு

மேலும் ஒருவருக்கு வாய்ப்பு

இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள 16 வீரர்கள் தவிர்த்து நடப்பு ஆண்டில் சிறப்பாக ஆடும் வீரர் ஒருவருக்கும் ஒப்பந்தம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அமைப்பு. அது டேல் ஸ்டெய்ன்-க்கு கிடைக்குமா?

தோனி நிலை

தோனி நிலை

இந்திய அணியில் மூத்த வீரர் தோனி உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணியில் எந்த போட்டியிலும் பங்கேற்கவில்லை. இதையடுத்து அவரை ஒப்பந்தப் பட்டியலில் இருந்து நீக்கியது பிசிசிஐ. அவர் தற்போது ஐபிஎல் தொடரில் ஆடி இந்திய அணியில் நுழைய முயற்சி செய்து வருவதாக ஒரு பேச்சு உள்ளது.

Story first published: Wednesday, March 25, 2020, 10:53 [IST]
Other articles published on Mar 25, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+